பக்கம்:பூ மரங்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. எண்ணக் குழப்பம் வெள்ளிக்கிழமை இரவு எட்டு மணி இருக்கும். செங் குளம் ஊரில் இருளும் அமைதியும் கவிந்து விட்டன. சில விடுகளில் படுத்து ஒரு கண்ணுக்குத் துரங்கிப் போய்’க்கூட இருப்பார்கள் பலர். நீலாவதி தலையிலே கைவைத்தவளாய் சுவரோரத்தில் உட்கார்ந்து விட்டாள், ராஜம் ஊஞ்சலில் கம்மா படுத்துக் கிடந்தாள். தூங்கவில்லை. . குத்துவிளக்கு குளுமையாக எரிந்து கொண்டிருந்தது. விளக்கைப் பள பளவென மின்னும்படி விளக்கி, அழகாகப் பொட்டிட்டு, செவ்வரளிப் பூச்சரம் அணிந்து எழிலுறுத்தி யிருந்தாள் நீலாவதி. விளக்கு முன்பு மெழுகிக் கோலமிட்டு சுத்தமாக வைத்திருந்தாள். சாயங்காலத்திலிருந்தே அவள் செல்வம் பண்டிதரை எதிர்பார்த்திருந்தாள். ஆனல் அந்த மத்திரவாதி வரவில்லை. முன்னதாகவே சொல்லி வைக்க வில்லை; அன்று வேலை அதிகம்; அதனுல் வருவதற்கில்லை’ என்று சொல்லி அனுப்பிவிட்டார் பண்டிதர். அந்த ஊரில் அவர் தனியரசு செலுத்தி வந்ததால் அந்தப் பதில் சகஜ மானதே. என்ருலும் நீலாவதிக்கு அது ஏமாற்றத்தையே அளித்தது. - செல்லம் பண்டிதர் வரமுடியாது என்று சொல்வி அனுப் பியதும், வேலைக்காரி லக்ஷ்மி பண்டுவரய்யா வராட்டா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/67&oldid=836091" இலிருந்து மீள்விக்கப்பட்டது