பக்கம்:பூ மரங்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது 67 போகட்டும். அதுக்காகச் சும்மா இருந்திரப்படுமா? காயங் குளத்தாளைக் கூட்டிக்கிட்டு வந்து திருநூறு போட்டுப் பாத்தி ரலாம். அவ கொள்ளிக்கட்டை வச்சு மந்திரிச்சு விபூதி பூசிஞலே எல்லாக் குத்தமும் பறந்திராதா, பறந்து' என்று அறிவித்து, அவளேயே கூட்டியே வந்து விட்டாள். செங்குளத்துப் பெண்களின் துணையாய், அவர்கள் கும்பிடும் அம்மன்கள், சாமிகளின் பிரதிநிதியாய், இன்னும் பேசாத சக்திகள் பலவற்றின் பேசும் பிம்பமாய் வரங் கொடுத்து-சாபமும் அளித்து-ஊர்ப் பெண்களின் அன் பையோ, பய பக்தியையோ பெற்று, எப்படியோ வெற்றி கரமாகக் காலம் ஒட்டிவந்த காயங்குளத்தாள் வந்தாள். திருநீறு மந்திரித்தாள்! இரண்டு மணி நேரம் வம்பளந்தாள். போளுள். ‘எப்படி ஆச்சி வருவான் அந்தச் செல்லம் பண்டுவன்? அவன் தான் பண்ணே வீட்டுக் கையாளு ஆசசுதே! பண்ணை யாரு வீட்டிலே வந்திருக்காளே அந்த ராங்கிக்காரி-அவ தான் கொஞ்சம்ஞலும் வெக்கம் கிக்கம் இல்லாமல் குலுக்கி மினுக்கிக்கிட்டுத் திரியிதா பொன்னம்மா-அவ கூப்பிட் டனுப்பின ஒடி வருவான். அவ. கா. க ப ன ம் பட் டு சட்டைன்னு எவ்வளவோ கொடுப்பா. ஊரிலே இன்னும் என்னென்ன வெல்லாமோ சொல்லிக்கிடுதோ, அதுல்லாம் நமக்கென்னத்துக்கு-பெரிய இடத்துப் பொல்லாப்பு: என்று தனது பண்பாட்டின்படி ஏசித் தீர்த்தாள். அவள் வழக்கமே அது தான். இங்குள்ளதை அங்கு போய்ச் சொல்லி, அங்கே நடப்பதை இங்கு வந்து சொல்லி, எல்லோ ரையும் ஆகாமல் அடிச்சு வேடிக்கை பார்த்துக் களிக்கும் சுபாவமுள்ள எத்தனையே பிரகிருதிகளில் அவளும் ஒருத்தி. அவளது திறமையைக் கண்டு-அப்படி எதுவும் அவளிடம் இருந்ததில்லை!-அன்பு கொண்டவர்களேவிட, அவளுடைய கருநாக்குக்குப் பயந்து அவளே மகிழ்வித்து அனுப்புகிற பெண்கள் தான் அதிகம். அவன் பெயர்கூடப் பலருக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/68&oldid=836092" இலிருந்து மீள்விக்கப்பட்டது