பக்கம்:பூ மரங்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது 71 "நாம எப்படித் திட்டாந்தரமாச் சொல்ல முடியும்? பி ச் சி சொன்னதினலே, யோசிக்க வேண்டியிருந்துது. வேறென்ன?’ என்ருள் நீலாவதி. அவர்கள் யோசனை எந்தவிதமான முடிவையும் எட்ட வில்லை. எட்ட முடியவில்லை. ம்ம். கவலைப்பட்டு என்ன செய்ய! எல்லாம் நடக்கபடி நடக்கு. நாம வீளு மனசைப் புண்ணுக உலேயவிடுவானேன்? படுத்துத் துரங்குவோம்’ என்று சொல்லி எழுந்தாள். லக்ஷ்மி, பின்னலே கதவெல் லாம் தாழ்ப்பா போட்டாச்சா? முன்வாசக் கதவையும் தாழிட்டிடு என்று உத்திரவிட்டாள். எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டு, லக்ஷ்மி பெட் ரூம் லேட் டை ஏற்றி, திரியும் முத்துபோல் சிறு ஒளி மட்டுமே நிற்கும்படி குறைத்து ஒரு மூலையில் வைத்தாள். பக்கத்தில் தீப்பெட்டியும் எடுத்துப் போட்டாள். ஊஞ்சலிலிருந்து எழுந்த ராஜம் குத்து விளக்கருகில் போய் "இதை அணைச்சிரட்டுமாம்மா? என்று விசாரித்தாள். அச்சானியமா என்ன பேச்சு இது. எத்தனை நாள் சொல்லுவது? விளக்கை நிறுத்தட்டுமா-இல்லை உசத்திரட்டு மான்னு கேட்டா என்ன? விளக்கு நாச்சியா தலையிலே அடி யாதே. பூவை எடுத்துக் குளிரவையி. அல்லது திரியை எண் ணெய்க்குள் இழுத்திரு” என்று மகளுக்குப் போதித்தாள் தாய ராஜம் விளக்குச் சரத்தை இழுத்து, பூவில்ை சுடரை ஒடுக்கி விட்டு, தனது படுக்கைக்குப் போளுள். குத்துவிளக்கு அணைக்கப்பட்டதால் எழுந்த கறுகல் வாடை பரவியது அங்கே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/72&oldid=836103" இலிருந்து மீள்விக்கப்பட்டது