பக்கம்:பூ மரங்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இப்படி சட்டபூர்வமான, சமூக ரீதியான, மாறுதல் வருவதற்கு முன்னரே-அல்லது, அதற்கான சூழ்நிலை உரு வாகிக் கொண்டிருக்கிறபோது-தனிநபர்கள் சிந்தனையிலும் மனப்பண்பிலும் ஒருவித மாற்றம் படிப்படியாய் தண்காட்டி வந்தது. அது இயல்பு. மனித சுபாவம். அதே சமயத்தில், தனிநபர்களின் மாறுதலே-சமூகரீதி யில் படிந்துபோன சுவட்டிலிருந்து வழிவிலகிப் புதியபோக் கில் அடி எடுத்துவைக்க முயலும் புதுமையை, துணிச்சலை விரும்பாதவர்களும் வரவேற்காதவர்களும், ஆதரிக்காதவர் களும் இருப்பதும் இயல்பேயாகும். இவர்கள் எதிர்ப்பு காட்டி யும், மாறும் முயற்சிகளே முறியடிக்க ஆவன செய்தும்,தங்கள் சுயநலத்துக்கு லாபம்தேட முயலுவதும் எக் காலத்திலும், எந்நாட்டிலும் காணக்கூடிய உண்மைகள் தான். இவ் விதமான சமூக விவகாரங்கள், காலம் செய்கிற மாறுதல்கள், குடும்பச் சித்திரங்கள், தனி மனித உணர்ச்சிப் போராட்டங்களை எல்லாம் சுவாரஸ்யமான நாவல்களில் பிரதிபலித்துக் காட்டவேண்டும் என்ற ஆசை, நான் எழுத் தாளன் ஆகத் துணிந்த காலம்முதலே, என்னைப் பற்றிக் கொண்டுள்ளது. அத்துடிப்பினல் நான் பல நாவல்கள் எழுதி னேன். என்ருலும், நாடு, சமூகம், குடும்பம், தனிநபர் மத் தியில், நம்மிடையே, காலம் நிகழ்த்தியுள்ள மாறுதல்களை, பாதிப்புகளை, விசித்திரங்களே, வேடிக்கைகளை பெரும் அள வுக்குப் பிரதிபலித்துக் காட்டுகிற மகத்தான நாவலே நான் இன்னும் எழுதி முடிக்கவில்லை. என்ருவது ஒருநாள் உரு வாக்கிவிடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. "வசந்தம் மலர்ந்தது’ எனும் இந்நாவல் ‘மூடுபனி' என்ற பெயரில் சிவாஜி வார இதழில் பிரசுரமாயிற்று. சிறு ஊர்களில், பணபலமும் வாயடியும் கையடியும்: பெற்று சமூக அந்தஸ்தோடு மேல் தட்டில் இருப்பவர்கள், தங்கள் சுயநலத்துக்காக, தன்னல வெறியோடு எதையும் செய்வார்கள்: யாருக்கும் எந்தவிதமான தீமையையும் செய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/8&oldid=836118" இலிருந்து மீள்விக்கப்பட்டது