பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

9

26. அமெரிக்காவில், பென்சில்வேனியா பல்கலைக் கழகம் Academy of Pensylvaniya என்று பெயர் பெற்ற கலைக் கழகத்தை பெஞ்சமின்தான் முதன்முதலில் உருவாக்கினார்.

27. பெரியம்மை நோய் வராமல் தடுப்பதற்கு அம்மை குத்திக் கொள்ளும் பழக்கம் அதுவரையில் வராமலிருந்தது. அந்த ஊசியை மக்கள் போட்டுக் கொள்ளும் வழக்கத்தை பிராங்ளின் தான் ஏற்படுத்தினார்.

28. சாதாரணமாக ஜலதோஷம் அடிக்கடி மக்களுக்கு பிடிப்பதைத் தடுக்க அதற்கான அறிவுரைகளை அவர்களுக்குப் போதித்தார். இன்றளவும் அந்த எச்சரிக்கைகளே மக்களுக்குப் பயன்பட்டு வருகின்றன.

29. பிரெஞ்சுப் புரட்சி உருவாவதற்கு முன்பே பெஞ்சமின் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளின் பிரதிநிதியாகப் பணியாற்றியபோது, ஸ்டாம்பு சட்டம் என்ற ஒரு கொடுமையான சட்டத்தை அறவே அவர் நீக்கினார். அதற்காக தனது பணியைவிட்டு விலகும்படியான சூழல் இருந்ததால், அந்த வேலையை விட்டு விலகிவிட்டார்.

30. அமெரிக்க குடியேற்ற நாட்டு மக்களின் சுதந்திர பிரகடனத்தை தயாரிக்கவும், அதைத் திருத்தி ஒழுங்குபடுத்தவும் அந்தக் குழுவுக்கு இரவும் பகலுமாக உறுதுணையாகப் பணியாற்றினார்.

31. அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கான அரசியல் அமைப்புச் சட்டத்தை எழுதவும், அவற்றை நிறைவேற்றவும் கடுமையாக உழைத்தார். அந்த அரசியல் சட்டத்தின் கீழ்தான் அந்நாட்டு மக்கள் இன்றும்கூட வாழ்ந்துவரும் நிலையை ஏற்படுத்தினார் என்பதைப் படிக்கின்றோம்.

32. பிரான்ஸ் நாட்டில் அமெரிக்க குடியேற்ற நாடுகளின் ஆணையாளராக அவர் பணியாற்றினார். அப்போது