பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

பெஞ்சமின் ஃபிராங்ளினின்

வாங்கிட அவர் வீட்டிற்கு வருவார்கள், போவார்கள். அத்தகைய ஓர் ஏழைப் பெற்றோர்களுக்கு மகனாகப் பிறந்தவர்தான், பெஞ்சமின் ஃபிரோங்ளின். அந்த தொழில்தான் அவர் ஆரம்பத்தில் தமது பெற்றோர்களுக்குரிய உதவியாளராகப் பணியாற்றி வரும் நிலையும் இருந்தது.

அந்த நகர், கப்பல்கள் அடிக்கடி வந்து தங்கும் ஒரு துறைமுகப் பட்டினம். அங்கே இங்கிலாந்து போன்ற நாடுகளிலே இருந்து கப்பல்கள் வரும், தங்கும், போகும்.. அங்குள்ள மக்களுக்குரிய பண்டங்களும், சரக்குகளும் அக் கப்பல்களில் வரும், அந்த நகர் மக்கள் நடமாடிடும் ஒரு பண்டகக் கரை ஊராகவே எப்போதும் காட்சி தந்தது.

அந்த நகரிலே உள்ள சிறுவர்கள், அங்குள்ள கடற் கரையிலே விளையாடுவார்கள், மீன் பிடிப்பார்கள், அதே நேரத்தில் அந்நகருக்குரிய புதுப் புது வீடுகளைக் கட்டிட செங்கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் அங்கே உண்டு. தொழிலகங்களில் பணியாற்றிடும் கொத்தனார்கள் ஏராளமாகக் குடியிருப்பார்கள். இந்த கூட்டங்களிலே எல்லாம் சிறுவன் பெஞ்சமின் ஃபிராங்ளின் கலந்து கொண்டு, அவர்கள் இடையே ஒரு குறிப்பிடத்தக்க சிறுவனாகவே விளங்கி வந்தார்.

ஒரு நாள், பெஞ்சமின் நீர்க்கரை அருகே நின்று கொண்டு ஒரு காற்றாடியை உயரே பறக்க விட்டுக் கொண்டிருந்தார். அப்போது காற்றுக்கு எதிராக அவரை இழுப்பது போன்ற ஒரு சக்தி, உணர்ச்சி அவருக்குத் தோன்றியது; ஆச்சரியமும் திகைப்பும் அவருக்கு ஏற்பட்டது. வேகமாக அடித்த காற்று, ஃபிராங்ளினை இழுத்துச் செல்வது போல தோன்றவே, “தண்ணீரில் இருந்தால் காற்று நம்மை இழுத்துக் கொண்டு போகுமோ” என்று எண்ணலானார்; சிந்தனை செய்தார்!

மறுநாள், அவர் ஒரு குளத்திலே நீந்திக்கொண்டே காற்றாடியை உயரப் பறக்கவிட்டுக் கொண்டிருந்தார்.