பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

15

இந்த இரு பத்திரிகைகளைப் பார்த்த ஜேம்சுக்கு, தாமும் ஒரு பத்திரிகையைத் துவக்கினால் என்ன என்ற ஆசை தோன்றி, மூன்றாவதாக 'The New England Courant' “நவ இங்கிலாத்து செய்தித்தாள்” என்ற ஒரு பத்திரிகையை, தனது அச்சகத்திலே அச்சடித்து வெளியிடலானார். அந்த பத்திரிகை நல்லமுறையிலே மக்களிடையே செல்வாக்கோடு விற்பனையாகி வந்தது. அதற்கும் பெஞ்சமின் உழைப்பே முக்கிய காரணமாகும்.

ஏற்கனவே எழுத்தாளராக உருவாகி இருந்த பெஞ்சமின், அண்ணனுடைய பத்திரிகையிலே தானும் எழுதலாமே என்ற ஆசை ஏற்படுவது இயற்கைத்தானே எவ்வளவோ முயன்று பார்த்தும் ஜேம்ஸ் தனது தம்பியை பத்திரிகையிலே எழுதவிடாமல், விற்பனைக்கு மட்டுமே ஃபிராங்ளினை ஏவி, கடுமையாகவே வேலை வாங்கி வந்தார்.

ஒருநாள் பெஞ்சமின் இரவு எல்லாம் கண்விழித்து ஒரு கட்டுரையை எழுதி, வழக்கம்போல அச்சகத்துக்கு வரும் கட்டுரைகளிலே ஒன்றாக சேர்த்துவிட்டார். அந்த கட்டுரை மிக நன்றாக இருந்ததைப் பார்த்து ஜேம்ஸ் அதைப் பிரசுரித்தார். அந்த கட்டுரை நன்றாக இருப்பதால், அச்சக ஊழியர்கள் எல்லாம் பாராட்டினார்கள். இந்தப் புகழைக் கண்ட பெஞ்சமின், தன்னையுமறியாமல் ‘நான்தான் அக் கட்டுரையை எழுதியவன்’ என்று அவர்களிடையே அறிமுகம் செய்துகொண்டது, அண்ணன் ஜேம்சுக்கு அறவே பிடிக்கவில்லை. காரணம், தனது தம்பி ஒரு பத்திரிகை ஆசிரியன் என்று பெயரைப் பெற்றுவிட்டால், பிறகு அந்த பத்திரிகை தனது தம்பியின் பெயருக்கு மாறிவிடுமோ என்ற அச்சம் ஜேம்சுக்கு அதிகமாக வளர்ந்து வந்ததுதான் காரணமாகும்.

எப்போதுமே சுயேச்சை உணர்ச்சியும் சுறு சுறுப்பும் கொண்ட பெஞ்சமினுக்கு, அண்ணனுடைய அற்பப்