பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

பெஞ்சமின் ஃபிராங்ளினின்

செய்தபடியே, கண்ட இடங்களிலே உண்டு அங்கங்கே உறங்கி நாட்களை கழித்து வந்தார்.

போஸ்டன் நகரைவிட்டுப் புறப்பட்ட பெஞ்சமின், நியூயார்க்கில் இருந்த நண்பரைச் சந்தித்தபோது, அவர் கொடுத்த பிலடெல்பியா அச்சக உரிமையாளரான வில்லியம் பிராட்போர்டு என்பவரைத் தேடிக் கண்டுபிடித்தார்.

இந்த வில்லியம் பிராட்போர்டுதான், பெஞ்சமின் பில டெல்பியாவுக்கு பசிமயக்கத்தோடு களைப்பாகத்தள்ளாடித்தள்ளாடி நடத்ததைப் பார்த்துக் கேலிச் சிரிப்பு சிரித்த டிபோராரீட் என்ற பெண்ணின் தகப்பனார் ஆவார். இது பெஞ்சமினுக்கு தெரியாது அல்லவா?

வியம் பிராட்போர்டு என்ற அந்த அச்சக உரிமையாளரை, அச்சகப் பணிக்காக பெஞ்சமின் சந்தித்தார். ‘அவர் எனக்கு வேலையாள் தேவையில்லை. எனது மகன் ஆண்ட்ரு பிராட்போர்ட் என்பவரிடம் சென்று பார்’ என்று தனது மகனின் முகவரியை கொடுத்து அனுப்பிவிட்டார்.

முகவரியோடு சீமான் பிராட்போர்டுவைச் சென்று கண்ட பெஞ்சமின், அவர் சிலநாட்களுக்கு முன்புதான் தனது வேலைக்கு பணியாளை அமர்த்திக்கொண்டு விட்டதால், அந்த சீமான் சாமுயல் கெய்மா என்ற வேறொரு அச்சகத்தாருக்குப் பணியாள் தேவைப்படலாம், அவரைப்போய் பாருங்கள் என்று கூறிவிட்டார்.

சாமுயல் கெய்மர், பெஞ்சமினைத் தனது அச்சகத்தில் கூலி வேலைக்கு வைத்துக்கொண்டார். அங்கு வேலைசெய்த காலத்தில் தனது கூலிவேலைக்கு வரும் வருவாய் பணத்தைச் செலவானதுபோக, பணம் சேமித்து வைத்து வந்தார்.