பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



19

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

அக்காலத்தில், அமெரிக்க குடியேற்ற நாடுகளில், மிகப் பெரிய நகரமாகும் பிலடெல்பியா. அங்கு வாழ்ந்த மக்கள் கற்றறிந்த உணர்வாளர்கள். பணக்காரர்களும், பிரபுக்களும் அதிக எண்ணிக்கையில் வாழ்பவர்கள். அந்த நகர மக்கள் நாகரிக வாழ்க்கைக்கு ஏற்ற ஆடை அணிகலன்களோடும் அழகான வீடுகளோடும், ஆடம்பர வாழ்க்கையோடும் வசிப்பவர்கள் ஆவர்.

கெய்மர் அச்சகத்தில் பணியாற்றியபோது, பெஞ்சமின் ஏராளமானப் புத்தகங்களைப் படித்தார். அன்றாட அறிவு முதிர்ச்சிக்கு ஏற்ற நூல்களைக் கற்று உலகத்தை உணர்ந்து கொண்ட அறிஞராகத் திகழ்ந்தார். தனக்கென ஓர் இல்லத்தை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, நண்பர்களை ஒன்று சேர்த்து உரையாடல்களை அடிக்கடி நடத்துவார். அதனால் பேச்சாற்றலையும் நுட்பமாக உணர்ந்து பேசும் ஆற்றலை வளர்த்துக்கொண்டார். எனவே, பிலடெல்பியா நகர் அவருக்கு மிகவும் மனத்திருப்தியோடு வாழும் நகரமாக அமைந்துவிட்டது.

இந்த நேரத்தில், பெஞ்சமின் போஸ்டன் நகரைவிட்டு ஓடிவந்துவிட்ட செய்தி, அவரின் தந்தை ஃபிராங்ளினுக்கும், அவரது சுற்றத்தாருக்கும் மனக்கவலை உருவாக்கி, பெஞ்சமினைத் தேடிக் கண்டுபிடிக்க எல்லாரும் முயற்சித்தார்கள். இந்த முயற்சிச் செய்தி டிலவேர் நகருக்கும் போஸ்டன் நகருக்கும் இடையே செல்லும் வியாபாரக் கப்பலின் தலைவராக விளங்கிய கேப்டன் ராபர்ட் ஹோல்ம்ஸ் என்பவருக்கும் எட்டியது. அந்த கேப்டன், பெஞ்சமின் சகோதரிகள் ஒருத்தியின் கணவர் ஆவார். அவருக்கு பெஞ்சமின் பிலடெல்பியா நகரில் பணியாற்றுவதும் தெரிந்துள்ளதால், அவர் தனது மைத்துனருக்கு வீடு போய் சேருமாறு கடிதம் எழுதினார்.

கடிதத்தைக் கண்ட பெஞ்சமின், தனது குடும்ப நிலை யையும், தமையன் தன்னிடத்தில் நடந்து கொண்ட சம்ப