பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

டிய பணம் கொடுப்பார் என்றார். உடனே, எனது தகப்பனார் என்ன கூறுவாரோ! என்றார் பெஞ்சமின்.

'நானே அவருக்கு கடிதம் எழுதுகின்றேன், நீ போஸ்டன் நகருக்குப் போ’ என்றார் கவர்னர். இன்னது சொல்வது என்று தெரியாமல் விழித்த பெஞ்சமின் ‘உங்கள் விருப்பப்படி செய்யுங்கள்’ என்றார்.

இந்த உரையாடல், அச்சகத்துள் நடக்கவில்லை; தெரு முனையிலே உள்ள ஒரு தேநீர் கடைக்கு அழைத்துச் சென்று, தேநீர் அருந்திக்கொண்டே கவர்னர் பேசி, பிறகு பெஞ்சமினை அச்சுக்கூடத்திற்கு அனுப்பிவிட்டுச்சென்றார் கவர்னர். அச்சக உரிமையாளருக்கு இதை கூறக்கூடாது என்றும் தெரிவித்துச் சென்றார்.

அச்சக உரிமையாளர் வற்புறுத்தி, கவர்னர் என்ன கூறினார் என்று கேட்டுக்கொண்டே இருந்தவரிடம் ஃபிராங்ளின் ஏதும் கூறாமல் 'எனது குடும்ப விஷயம்' என்று அவரது மாமாவின் விவரத்தை விளக்கினார்.

சில நாட்கள் கழிந்தது! கவர்னர் பரிந்துரைக் கடிதம் ஒன்றை அவரது தந்தை முகவரியிட்டு ஃபிராங்ளினுக்கு அனுப்பி, உடனே சென்று தனது தகப்பனாரைப் பார்க்குமாறு கவர்னர் கூறியிருந்தார்.

பெஞ்சமின் மீண்டும் போஸ்டன் நகருக்குச் சென்று, தனது தந்தையாரையும், குடும்பத்தினரையும், தமையன் ஜேம்ஸையும் பார்த்து மகிழ்ந்தார். கவர்னர் கடிதத்தை தந்தையிடம் கொடுத்தார்.

அதைப் படித்த பெஞ்சமின் தந்தை ஃபிராங்ளின், 'உனக்கு இந்த அனுபவம் போதாது, தனியாக ஒரு நிறுவனத்தை நடத்தும் வயதும் உனக்கு வரவில்லை. பிறர் பணத்தை கையாடும் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் காலம் வரும்போது நானே உனக்கு வேண்டியதைச் செய்-