பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

பெஞ்சமின் ஃபிராங்ளினின்

கிறேன்’ என்றார் ஃபிராங்ளின். கவர்னருக்கும் இதே பதிலை அவர் எழுதிவிட்டார்.

தகப்பனார் கூறிய வார்த்தைகளைக் கேட்ட பெஞ்சமின் மீண்டும் பிலடெல்பியா திரும்ப விரும்பினார். தகப்பனாரும் அவரது பயணத்தைத் தடுக்கவில்லை. காரணம், பெஞ்சமின் தந்தையிடம் தனது வாழ்க்கை நிலையில் உயரும் சந்தர்ப்பங்களை விளக்கிவிட்டு, அமைதியாகப் பயணமானார் பிலடெல்பியா நகருக்கு.

பென்சில்வேனியா கவர்னரை மீண்டும் சந்தித்து பெஞ்சமின் நடந்தவைகளைக் கூறினார். உடனே கவர்னர் அச்சகத்துக்கு வேண்டிய பொருட்களை வாங்க பெஞ்சமினை லண்டனுக்கு அனுப்பி வைத்தார்.

இலண்டன் மாநகரில் உள்ள அச்சகங்களில் ஒன்னரை ஆண்டு காலம் மீண்டும் பணியாற்றி, முன்பைவிடத் தன்னை எல்லா அச்சுப் பணிகளிலும் தொழிலறிஞனாக மாற்றிக்கொண்டார். பிறகு, மீண்டும் பிலடெல்பியா நகர் வந்து முன்பு பணியாற்றிய அச்சகத்திலேயே வேலைக்கும் சேர்ந்தார்.

சாமுவேல் கெய்மர் திடீரென்று இறந்துவிடவே, அந்த அச்சகத்திலிருந்த ஹ்யூமெரிடிக் என்ற தனது நண்பனும் பெஞ்சமினும் சேர்ந்து, நண்பரின் தந்தையிடம் கடனாகப் பணம் பெற்று அச்சகச் சாமான்களை இங்கிலாந்திலே இருந்து வரவழைத்து அச்சகம் ஆரம்பித்தார்கள்.

பெஞ்சமின் அச்சகம் ஆரம்பித்து செய்த முக்கியமான முதல் வேலை என்னவென்றால், அமெரிக்காவிலே இது வரையில்லாத முதன்முறையாக, தாமிரத் தகட்டின்மூலம் அச்சிடும் இயந்திர முறையைக் கண்டுபிடித்ததுதான்.

நியூ ஜெர்சியின் காகித நாணயப்பத்திரங்களுக்கு அவர் பலவிதமான ஓவிய வகைகளை வரைந்து தயாரித்து;