பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



23

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

அவற்றை அலங்கரிக்கக்கூடிய தகடுகளையும் வெட்டி, நாணய வகைகளை பிரமாதமாக அச்சடித்துக் கொடுத்தார்.

இதன் மூலமாக, அவருக்கு நண்பர்கள் பெருகினார்கள். அந்த நகரில் சட்டசபை உறுப்பினர்களின் நட்பும் கிடைத்தது. பெஞ்சமினுடைய அச்சகத்துக்கு ஏராளமான பெருமையும் புகழும் ஏற்பட்டது. மக்கள் அவருடைய நாணய அச்சடிப்பு முறைகளை வானளாவாக வரவேற்றுப் புகழ்ந்தார்கள். அதனால், ஒவ்வொரு உயர் அதிகாரிகளும் பெஞ்சமினை தங்களது வீட்டிற்கு அழைத்து விருந்துகளை நடத்தி விழா கொண்டாடினார்கள்.

பெஞ்சமின், ‘பென்சில்வேனியா வர்த்தமான இதழ்’ என்ற பத்திரிகையை ஆரம்பித்து, அதற்கு ஆசிரியர், எழுத்தாளர், விற்பனையாளர், விளம்பரதாரர், நிருபராகவும் பணியாற்றினார். பென்சில்வேனியா நகர் உள்ளூர், வெளியூர் மக்கள் செய்திகளை அதிகமாக வெளியிட்டார்.

இந்த வழக்கத்தை, இவர் செய்வதற்கு முன்பு யாரும் அன்றுவரை இதுபோல் பத்திரிகையில் செய்ததில்லை. அவரே மக்களது தேவைக்கேற்ற கேள்விகளை எழுதிக் கொண்டு, பதிலையும் அவரே எழுதி வந்தார். இதனால், இந்த புதிய முறை மக்களிடையே ஒரு நல்ல செல்வாக்கையும், புகழையும், விற்பனையையும் தேடிக் கொடுத்து வந்தது. பத்திரிகைத் துறையில் பெஞ்சமினுக்குப் போட்டியும், பொறாமையும் மென்மேலும் தொடர்ந்தபடியே இருந்தது. கிராமங்களிலே எல்லாம் பத்திரிகைகள் அதிகமாக விற்பனையாகத் தொடங்கி விட்டன.

அவரே தமது பத்திரிகைக்குரிய தேவையான அச்சடிக்கும் காகிதம், வாங்கி வந்து, ஒரு வண்டியிலே அதை ஏற்றித் தெருத்தெருவாக உருட்டிக் கொண்டு போய்