பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

பத்திரிகை 1772-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19-ம் தேதி வெளி வந்தது.

அமோகமான விற்பனையால், ஏழை பெஞ்சமின் பணக்காரராக மாறினார். தாம் அச்சகத்திற்காகப் பெற்ற எல்லாக் கடன்களையும் தீர்த்தார். அதே நேரத்தில் பிலடெல்பியாவில் குறிப்பிடத்தக்க ஓர் அச்சாளராகவும் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தார். இந்த பத்திரிகைக்குப் போட்டியாக வேறு எந்த பத்திரிகையாலும் முன்னேற முடியவில்லை. அந்த அளவு அவர் செல்வாக்கும் பெற்றார்.

‘ஏழை ரிச்சர்டின் பஞ்சாங்கம்’ பத்திரிக்கைத் துறையின் முன்னோடியாக வெற்றி பெற்றதைப் போலவே, அவருடைய மற்றொரு பத்திரிகையான ‘பென்சில்வேனியா வர்த்தமான சஞ்சிகையும்’ ஓங்கி வளர்ந்து புகழடைந்தது. அந்த இரு ஏடுகளும் பல்லாயிரக்கணக்கான இதழ்கள் விற்க ஆரம்பித்து நிலை நின்றன.

இந்த இரண்டு பத்திரிகைகளும், அமெரிக்க குடியேற்ற நாடுகளில் மிக முக்கியமான மக்கள் செல்வாக்கைப் பெற்று வளர்ந்தன. விரைவில் மக்களிடம் இந்த இதழ்கள் போய் சேர வேண்டும் என்பதற்காக, பெஞ்சமின் குதிரை வீரர்களைக் கூலிக்கு ஏற்பாடுசெய்து வழங்கி வந்தார். அதனால் பெஞ்சமின் எப்போதும் தன்னை ஓர் அச்சாளன் என்று கூறியே பெருமை பட்டுக் கொண்டார்.

பத்திரிகைத் தொழிலிலும் அவர் ஒரு முன்னோடியாக நின்றார்! அச்சாளர் துறையிலும் அவருக்கு முன் ஈடு எடுப்புமாக எவரும் அன்றுவரை விளங்க முடியாமல் இருந்தார்கள். இந்த இரண்டு தொழில்களும் அவருக்கு ஏராளமான பொருட் செல்வத்தையும், புகழ் செல்வத்தையும் ஈட்டித்தந்து வந்தன.

இந்த நேரத்தில், தான் அவர், முதன் முதலில் பிலடெல்பியாவில் சந்தித்துக்கேலிச்சிரிப்பு சிரித்த பெண்ணான