பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

39

பிலடெல்பியா நகரின் குளிர்கால தட்பவெப்பங்களையும் நன்றாகச் சிந்திப்பவர் ஃபிராங்ளின். குளிர் காலத்தில் தனது உடல் எல்லாம் நடுநடுங்குவதைக் கண்டார். கை கால்கள் கணப்பின் சூடேற்றத்தில் இருக்கும்போது, அவரது முதுகுப்புறத்தில் ஜில்லென்று பனி உறைவதைக் கண்டு, இதை அகற்றுவது எப்படியென்று அவர் சிந்தித்தார். சூடேற்றும் திட்ட்ங்கள் வ்ளர்ச்சியுறுவதற்கு வழி என்ன என்று ஆய்வு செய்தார்.

காற்று உயரே செல்வதையும், அந்த இடத்திலே குளிர் வேறு காற்று உள்ளே புகுவதையும் பெஞ்சமின் கண்டு சிந்தித்தார். அவர் காலத்தில் இருந்த கண்டுபிடிப்புகள் சிறிய திறவைகளுடன், வெப்பத்தைவிட காற்று வீச்சுக்கே அதிக இடமளிப்பதாய் இருந்தன.

மேற்கண்ட விஞ்ஞான உண்மைகள் மக்களுக்குப் பயன்படுபவனாக இல்லையே என்றுணர்ந்து குறைவான எரிசாதனத்துடன் அதிகமான வெப்பம் தரக்கூடிய ஒரு நல்ல ஸ்டவ் என்ற கணப்படுப்புக்குத் திட்டமிட்டார்.

ஃபிராங்ளினின் கணப்படுப்பு, இதன் அருகிலேயே அமர்ந்துள்ள பெண்களுக்கு அவ்வளவாக குளிரும், பல் வலியும் வராமல் இருப்பதை சோதனை செய்து பார்த்தார்.

இராபர்ட்கிரேஸ் என்ற அவரது நண்பர் ஒரு இரும்பு வார்ப்புப் பட்டரை வைத்திருந்தார். அதில், தனது ஸ்டவ் அடுப்பை செய்து தருமாறு, மாதிரி அடுப்பொன்றையும் கொடுத்தார்.

‘இந்த புது அடுப்பு, பழைய அடுப்பைவிட இரண்டு மடங்கு வெப்பம் தருகிறது. இதை எரிய விடவும் கால் பங்கு விறகு இருந்தால் போதுமே’, என்று ராபர்ட் கிரேஸ் கூறினார். அதுமட்டுமல்ல, நான் வியாபாரி அல்லன்,