பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

பெஞ்சமின் ஃபிராங்ளினின்

என்னால் விற்கவும் இயலாது, இரும்புக் கொல்லனுக்கு இது வீண் வேலையானால் என்ன செய்வேன்?’ என்று கொல்லன் ஃபிராங்ளினிடம் சொன்னான்.

இந்த புது ஸ்டவ் பற்றி, ஃபிராங்ளின் தனது வர்த்தமான இதழில் எழுதினார். ‘எனது ஸ்டவ் அதிக வெப்பத்தைத்தரக்கூடிய ஒன்று. அமர்த்தியுள்ள இடத்தைக் கதகதப்பாகவே வைத்திருக்கும். தீயை அதிகமாக எரியவிட்டால் உடல் நலம் குன்றும்! வயோதிகத்தோற்ற வாய்ப்பை வழங்கி, தோல்களைச் சுருங்க வைத்துவிடும். எனவே, அதிகம் எரிய விடாமல் அதிகப் பணமும் செலவு செய்யாமல் இந்த ஸ்டவ்வைப் பயன்படுத்தலாம் என்று தனது பத்திரிகையிலே எழுதினார். துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டார்! இந்த கட்டுரையின் எழுத்துக்கள் பொதுமக்களைக் கவர்ந்தன.

பென்சில்வேனியா கவர்னராக அப்போது இருந்த தோமாஸ் என்பவர், பெஞ்சமினுக்குரிய வியாபார உரிமையைக்கொடுத்து, வேறு எவரும் அதைச் செய்து விற்க முடியாதவாறு தடுத்தார்.

கவர்னரின் வியாபார உரிமையை பெஞ்சமின் ஏற்க மறுத்தார். ‘பிறருடைய கண்டுபிடிப்புகளின் பலனை நாம் அனுபவிப்பது போலவே, என் ஸ்டவ்வும் மக்களுக்காகப் பயன்பட வேண்டும்’, என்று கூறி அந்த உரிமத்தை அவர் பெற மறுத்துவிட்டார்.

இது ‘ஃபிராங்ளின் ஸ்டவ்’ என்று பொதுமக்களிடையே பெயரிடப்பட்டு நல்ல செல்வாக்கும் பெற்று, மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. அமெரிக்காவில் மட்டுமல்ல, ஐரோப்பா கண்டம் முழுவதுமே நல்ல பாராட்டைப் பெற்று மக்களுக்குப் பயன்பட்டது. கி.பி. 1771-ம் ஆண்டு இந்த ஸ்டவ்வின் செல்வாக்கும் விற்பனையும் பரவலான உச்சக்