பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

45

அதனுடைய மென்மைக்கு ஏற்றவாறு மெதுவாகத் தான் பனியை உருகச் செய்து புதைந்து போனது. ஆனால், வெள்ளை நிறத்துணியின் நிலை என்ன?

வெள்ளை நிறத்துணி, அவருடைய பரிசோதனைகள் எல்லாம் முடிந்து அதிகநேரமான போதும் கூட அது பனியில் முழுகாமல் அப்படியே இருந்தது. அதனால் இதன் காரணம் என்ன என்பதைக் கண்டறிய விரும்பிய அந்த மாமேதை, இறுதியில் என்ன கண்டு பிடித்தார் தெரியுமா?

“மென்மையான வண்ணம் உஷ்ணத்தை எதிர்த்து நிற்கிறது” என்பதையும், ‘மெல்லிய வெள்ளை நிற ஆடைகள், துணிகள், தான் கோடைக்கால வெப்பத்தின் கொடுமையை எதிர்த்து நிற்கும் ஆற்றல் வாய்ந்தவை’ என்றும் கண்டு பிடித்து உலகுக்கு உரைத்தார்.

அதனால்தான், குளிர்காலம் வந்தால் கம்பளி ஸ்வெட்டர், உள்ளன் பணியன், கம்பளி கோட்டு, கம்பளி சட்டைகள், போர்வைகள் பலவற்றை அணிந்து இயற்கையின் வலிமையையே எதிர்த்து வாழ்கின்றோம்.

அதே போலவே, கோடையின் கொடுமைகள் நம்மைத் தாக்கும்போது, மென்மையான வெண்மை வேட்டிகளையும் சட்டைகளையும், கிளாஸ்கோமல் போன்ற துணிகளால் தைக்கப்பட்ட ஜிப்பாக்களையும் சட்டைகளையும் அணிந்து கொண்டு இயற்கையான கோடையைச்செயற்கை யாகவே எதிர்த்து இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

குளிருக்கும் கோடைக்கு உரிய இந்த ஆடை வசதிகளை நமக்கு உருவாக்கிக் கொடுத்த பேரறிஞர் யார்? அவர்தான் பெஞ்சமின் ஃபிராங்ளின் என்ற மனிதர்.

கிராம மக்களானாலும், பட்டினத்து மக்களானாலும், பட்டணத்துப் பாமரர்களானாலும், அவர்கள் நலமாக,