பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

பெஞ்சமின் ஃபிராங்ளினின்

கப்பலின் சமையலறையிலே உள்ள கிரீஸ்களை எல்லாம் கப்பலின் வழியாக, அதன்வழிச் சுவருகளில் சமையல்காரன் வெளியேற்றி வந்ததை, பெஞ்சமின் நேராகவே பார்த்தபோது, இந்த சிந்தனை அவருக்கும் தோன்றியதெனலாம்.

ஒருநாள், ஏரியின் தண்ணீரில் அடித்துக்கொண்டிருந்த விரல்களை எல்லாம் தம் நண்பர்களோடு பார்த்துப் பிரமித்தபடியே பெஞ்சமின் கூறினார், “நான் இந்த ஏரியின் அலைகளை அடக்கி அமைதி செய்வேன்” என்றார்.

இதைக் கேட்ட அவரது நண்பர்கள் அது முடியக்கூடிய காரியமா? என்று கிண்டலடித்தார்கள். ‘ஏன் முடியாது?’ என்று பந்தயம் கட்டுவார் பெஞ்சமின். அவரை எதிர்த்த எல்லா நண்பர்களும் ‘அது முடியாது’ என்று எதிர் பந்தயம் கட்டினார்கள்.

உடனே பெஞ்சமின், தன் கையிலிருந்ததைப் பிடி கொப்பி வளைவுள்ள ஓர் உருண்டை வடிவமான தடி போன்ற ஒரு பிரம்பை தனது கையில் ஏந்திக்கொண்டு, ஏதோ ஜெபம் ஜெயிப்பது போல் உதடுகளை உதறிக் கொண்டு, அந்த பிரம்பினால் ஏரியைச் சுற்றிச்சுற்றி சுழற்றிக் கொண்டிருப்பார்.

உடனே ஏரி அலைகள் எல்லாம் ஏற்கெனவே இருந்த தண்ணீருக்குள் அமுங்கி அமைதியாகி விட்டதைக் கண்ட அவரது நண்பர்கள் பெஞ்சமின் ஏதோ அற்புதம் செய்துள்ளார் என்று கூவிக்கூவி ஆரவாரமிட்டார்கள்.

இது அதிசயமோ அற்புதமோ அல்ல; பெஞ்சமின் கையிலே வைத்திருந்த பிரம்பின் மூட்டுக் கொப்பிக்குள்ளே எண்ணெய் பசையை நிரப்பிக் கொண்டு வந்திருந்தார் அல்லவா? அந்த எண்ணெய்தான். கடலிலிருந்த கப்பலின் சமைக்காரன் கலந்த கிரீஸ் எண்ணெய்க் காட்சியைப்