பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

51

போல ஏரியின் அலைகளும் பிரம்பில் அடைக்கப்பட்ட எண்ணெய்ப் பசை கலந்த நீருக்குள் அமிழ்ந்து விட்டன; அவ்வளவுதான்!

பெஞ்சமின், அட்லாண்டிக் பெருங்கடலுள் பல தடவை பயணங்கள் செய்தபோது, கடலில் எழும் நீரோட்டப்பாதை, கடலின் மற்ற இடங்களிலே இருப்பதைவிட வேறுபட்டிருப்பதை அவர் கண்முன்பாகப் பார்த்தார். அந்தக் கடலின் கடற்கரைகளை வெதுவெதுப்பாக்கி வரும் கல்ஃப்ஸ்ட்ரீம் எனும் குடாக்கடல் நீரோட்டமான Gulf-stream தான், அது என்று அவருக்குப் புரிந்தது. அந்த நீரோட்டத்தை எந்த விஞ்ஞானியும் அன்றுவரைக்கேள்விப்பட்டிராத நேரத்தில், இதனை ஆராய்ந்து பார்த்தவர் பெஞ்சமின்.

அந்த நீரோட்டப் பாதையை ஒரு முன்னறிவிப்பாக எண்ணி, கப்பலைச் செலுத்தும் மாலுமிகளுக்கு இடையூறு வராவண்ணம் ஒரு கடல்வழிப் படமும் வரைந்து கொடுத்து மாலுமிகள் அவரவர் கப்பலை வேகமாகச் செலுத்த புதிய பாதையைக் வகுத்துக் கொடுத்துக் கப்பல் வழிகாட்டியாக விளங்கினார்.

அந்த நீரோட்டம், சுற்றியுள்ள மற்ற கடல் தண்ணீரை விட தட்பவெப்ப நிலையில் வேறுபட்டிருப்பதையும் அவர் கண்டார். இந்த உண்மைகளை எல்லாம் ஒன்று சேர்த்து சிந்தித்த பெஞ்சமின், அந்த நீரோட்டமும் ஒரு நதிதான் என்றார். காய்ந்த நிலத்தின் வழியாக அது ஒடுவதற்கு பதில், கடல்வழியாக ஓடுகிறது என்று எண்ணினார். இந்த செய்திகளை எல்லாம் பெஞ்சமினுக்கு முன்னால் வேறு எந்த விஞ்ஞானிகளின் மூளை அணுக்களில்கூட கருவாக முளைக்கவில்லை என்பது அவரது கடல் ஆய்வுப் பரிசோத னையிலே குறிப்பிடத்தக்க ஒன்று.