பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

பெஞ்சமின் ஃபிராங்ளினின்

பாரசூட் கப்பல் கண்டுபிடிப்பு

கி.பி. 1776ம் ஆண்டு பெஞ்சமின் ரிப்ரைசல் என்ற கப்பலிலே பிரான்ஸ் நாட்டிற்குப் போய்க்கொண்டிருந்தார். அப்போது அமெரிக்க குடியேற்ற நாடுகள் தங்களது சுதந்திரப் பிரகடனத்திற்கான போர்களைச் செய்துகொண்டிருந்தன. அவர் பயணம் செய்த கப்பல் எதிரிகளிடம் சிக்கினால், அவர் ஒரு துரோகி என்று கூறப்பட்டுத்தூக்கிலே தொங்க விடப்பட்டிருப்பார். ஆனால் நல்வினை காரணமாக இவ்வாறு பிடிபடாமல் பிரான்ஸ் நாட்டை பல இன்னற்களுக்கு இடையே பெஞ்சமின் அடைந்துவிட்டார்.

அப்போது அவர் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகருக்குச் சென்று கொண்டிருந்தபோது, முதன் முதலாக வீதிகளிலே, திடல்களிலே காஸ் பலூன்கள் பறக்கப்பட்டிருந்தன. அந்த பலூன்கள் பட்டுத் துணிகளால் செய்யப்பட்டு, அதனுள்ளே ஆவி என்ற காஸ் Gas அடைக்கப்பட்டிருந்தது. பெஞ்சமினை வரவேற்க 50 ஆயிரம் மக்களுக்குமேல் அக்காலத்தில் ஆடிப்பாடிக் கோலாகலமாகத் திரண்டிருந்தார்கள். அப்போதுதான் அவரை வரவேற்கும் மகிழ்ச்சியின் ஒரு சம்பவமாக gas Balloon உயரே பறந்து பறந்து இறுதியில் அது மேக மண்டலத்துள் மறைந்துவிட்டதை அவர் பார்த்தார்.

அந்த பலூன் வானவழியாகப் பறக்கக்கூடிய ஒரு கப்பல். ஒருநாள் அந்த காஸ் பலூன் கப்பல் விமானமாக மாறி, பொதுமக்களை ஏற்றிச் செல்லும் விமான வசதியாக மாறும் நிலை வரும் என்று அவர் முன்கூட்டியே அறிந்தார், இந்தக் கப்பலை இன்று நாம் பாரசூட் என்று பெயரிட்டு, இராணுவ தளவாடங்களை எல்லாம் ஒரு காலத்தில் வானவழியாக ஏற்றிச்செல்லும் போர்சாதனமாக மாறி அமையும் என்று அப்போது அவரை வரவேற்கக் கூடியிருந்த மக்களி-