பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

53

டையே அந்த காஸ் பலூனின் அருமை பெருமைகளை விளக்கிப்பேசினார். அந்தக் கப்பல், இன்றும் போர்க்காலங்களிலே பாரசூட் என்று யுத்த தளவாடங்களிலே ஒன்றாகப் பயன்பட்டு வருகிறது அல்லவா? இந்த தத்துவத்தை அன்றே எவரும் கண்டுபிடிக்காத காலத்திலேயே சிந்தித்துப் பேசியவர் பெஞ்சமின் ஃபிராங்ளின்.

இசைக் கருவி ஆர்மோனியம்

ஒருசமயம் விளையாட்டாகப் பொழுது போக்கிட கண்ணாடித் துண்டுகளின் நடுவில் ஒரு துவாரத்தை துளைத்தார். அதை இசைப்பொருள்தரும் கோளமான ஓர் உருவில் அடித்தார். அவற்றில் அதிக அகலமான கண்ணாடியின் குறுக்கே ஒன்பது அங்குல் அளவும், மிகச்சிறிய கண்ணாடியின் அளவில் மூன்று அங்குல அளவும் உள்ளதாக வடிவமைத்தார்.

இதுபோன்ற முப்பத்து ஏழு கண்ணாடித் துண்டுகளைச் செய்து, அந்தக் கண்ணாடி பட்டைகளைத் தேய்த்து, அவற்றின் அகல நீள பரப்பளவுகளுக்கு ஏற்றவாறு ஓசை எழுப்பும் ஸ்வரங்களைச் சரியாகச் சிந்தித்து, அவற்றை ஓர் இரும்புக் கதிர்மீது ஏற்றிப் பொருத்தினார்.

அதிக அகலமான கண்ணாடிகளை இரும்புக் கதிரில் இருபுற மூலைகளிலும், மிகச் சிறிய கண்ணாடிகளை மத்தியிலும் பதித்தார். அவற்றை நான்கு கால்களையுடைய ஒரு பெட்டிக்குள் அந்த இரும்புக் கதிரானது மட்டவசமாக வைத்தார். அந்தப் பெட்டியின் மூலம் இசை ஒலியை எழுப்பலாம் என்று எண்ணிய அவர், அந்த இரும்புக்கதிரின் முன் உட்கார்ந்து கொண்டு, கதிர் சக்கரத்தில் காணப்படுவது போன்ற ஒரு கைப்பிடி மூலம், இரும்புக் கதிரைச் சுற்றிக்கொண்டே நகரும் கண்ணாடிகளின் முனைகளைத் தன் விரல்களால் அமுக்கினார்.