பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

பெஞ்சமின் ஃபிராங்ளினின்

இவ்வாறு எல்லாம் முற்காலத்தில் இருந்த ஓர் பழைமையான இசைக் கருவியைப் பற்றி அவர் கூறும் போது, “இந்த புதிய இசைக் கருவியின் நன்மைகள் என்னவென்றால், இதன் ஸ்தாயிகளை வேறு எந்த இசைக் கருவியையும் விட, விரல்களை மென்மையாகவோ, வன்மையாகவோ அழுத்துவதின் வாயிலாக, அவரவர் விருப்பம்படி எல்லாம் ஓசையைக் கூட்டவும் குறைக்கவும் செய்யலாம். இசைக்கருவியில் ஒரு முறை நன்றாக ஸ்ருதி கூட்டி, மறுபடியும் ஸ்ருதி கூட்ட வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.

இந்த இசைப்பெட்டியை தானே கண்டுபிடித்து செய்ததுமன்றி எவ்வாறு அதை இயக்குவது என்பதையும் விளக்கிக்கூறி, அந்தப்பெட்டிக்கு “ஆர்மோனிகா” என்ற ஓர் அழகு பெயரையும் சூட்டினார் பெஞ்சமின் ஃபிராங்ளின். அதை எவ்வாறு இசைப்பது என்பதையும் அவர் வாசித்துக் காட்டினார்.

நாளாவட்டத்தில் அந்தப்பெட்டி இசை உலகத்தில் கையாளப்பட்டு, சங்கீதங்களை இயக்கி வந்தபோது, ‘ஆர்மோனிகா’ என்ற அந்தப்பெட்டி தற்போது ஆர்மோனியம் என்று தமிழால் அழகாக அழைக்கப்படுவது மட்டுமல்லாமல் முதன் முதலாக இசையைக்கற்க முன்வரும் எவரும் அவர் முன்னாடி அந்தப் பெட்டியை வைத்து வணக்கம் செய்த பிறகே அந்தக் கருவியை அழுத்தி இயக்குவதை இன்றும் நாம் பார்க்கிறோமே, இதைக் கண்டு பிடித்த அந்த மகானுக்காக நாம் என்ன கைமாறு செய்தோம்? ஓர் உருவ சிலையையாவது வைத்தோமா அவரை மறவாது நன்றி காட்டிட?

இந்த இசைக் கருவிக்கு அக்காலத்தில் மக்களிடையே மிகுந்த பரபரப்பும் செல்வாக்கும் ஏற்பட்டது இசை உலகையே அது மயங்க வைத்து மகிழ்ச்சியையூட்டியது. இசைக் கலைஞர்கள் எல்லாம் அந்தக் கருவியை தத்தங்களது இசை