பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

55

மேடைக் கச்சேரிகளிலே மிக அருமையாகக் கையாண்டு பெருமை பெற்றார்கள்.

உலகப் புகழ்பெற்ற இசைமேதைகளான மோசார்ட், பீத்தோவன் என்ற இருபெரும் கலையுலகச் சித்தர்கள், பெஞ்சமின் கண்டு பிடித்துக் கொடுத்த ஆர்மோனியப் பெட்டியின் மூலமாகவே, இசை மெட்டுகளைப் போட்டுப் புகழடைந்தார்கள்.

மின்சாரம் என்ற ஓர் மின் சக்தியை 1746-ம் ஆண்டில் பெஞ்சமின் மீண்டும் போஸ்டன் நகருக்கு வந்திருந்தபோது கேள்விப்பட்டார். அதாவது ஆர்மோனிய இசைக் கருவியைக்கண்டு பிடிப்பதற்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பே, அதைப் பற்றி அறிந்திருந்தார்.

இருவகை மின்சாரம் நெகட்டிவ்-பாசிட்டிவ்!

டாக்டர் ஸ்பென்சர் என்பவர், மின்சாரம் பற்றி ஆய்வு செய்த உபகரணக் கருவிகளை பிலடெல்பியா திரும்பிய பெஞ்சமின், அங்கே அவற்றை விலைக்கு வாங்கிக் கொண்டார். அந்த கருவிகளைப் பற்றிய ஆராய்ச்சியிலே பெஞ்சமின் தீவிரமாக ஈடுபட்டார்.

தனது வீட்டிலிருந்த சாமான்களை வைத்துக்கொண்டு இரவும்பகலுமாய் மனம்போனபாடி ஓர்உப்பு உறை, காடிக் குப்பி, ஒருதும்புக் குழாய் கைப்பிடி, ஒரு புத்தக பைண்டிங் கிலிருந்து எடுக்கப்பட்ட தங்கம், இவற்றை வைத்துக் கொண்டு சோதனையில் ஈடுபட்டார் பெஞ்சமின்.

மின்சாரப் பொறிகளைப் பிடித்து அடைத்து வைக்க ஓர் இயந்திரம் உருவாக்கினார். அதை நண்பர்களுக்கு முடுக்கிக் காட்டினார். அதைப் பார்க்க மக்கட் கூட்டத்தினர் திரண்டார்கள். ஆனால், தனது கடுமையான மின்