பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

57

யாது. அவ்வளவு ஓர் இன்றியமையாத பொருளாக அது அமைந்துள்ளது அதன் ஒளியைப் பெறுவதற்காக.

மின்னல் என்றால் மின்சாரமே ஆகும் என்பதை நிரூபிக்க நினைத்தார். வானத்திலே, எப்படியாவது ஒரு கூரிய முனையைச் செலுத்த வேண்டும் என்று கருதினார்.

பெஞ்சமின் ஒரு காற்றாடியை வானத்தில் பறக்கவிட்டார். காற்றாடியின் குறுக்காக இரண்டுக்குச்சிகளை வைத்துக்கட்டினார். அதன்மீது ஒரு பட்டுக் கைக்குட்டையை இறுக்கமாக விரித்து முடிந்திருந்தார். காற்றாடிக்கு தேவையான ஒரு வால், வளையம், ஒரு நூல் பந்து ஆகியவை பொருத்தப்பட்டிருந்தன.

இரண்டு குறுக்குக் குச்சிகளில் ஒன்று மேல் நோக்கி நேராக நிற்கும் இல்லையா? அந்நிற்கும் குச்சியின் மேல் முனையில் கூரிய முனையுடைய கம்பி ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தது. குறுக்குச் சட்டத்திற்கு மேலே அந்த கம்பி ஓர் அடி உயரம் எழும்பி நின்றது. காற்றாடியைக் கட்டி அதைப் பிடித்துக் கொண்டிருக்கும் நூலின் ஒரு முனையில் இரும்புச்சாவி ஒன்றையும், பட்டு ரிப்பன் மூலம் பெஞ்சமின் இணைத்திருந்தார்.

வானத்தை நோக்கி அவர் நிமிர்ந்து, இடிகளை முழக்கி கடமுடா என்று மக்களைப் பயமுறுத்தும் கருமேகங்களைக் கூர்ந்து கவனித்துக் கொண்டே தகப்பனும் பிள்ளையுமாக இருந்தார்கள். பிறகு, மகன் வில்லியத்திடம் காற்றாடியைக் கைமாற்றிக் கொடுத்தார். காற்றாடியின் நூலைப் பிடித்துக் கொண்டு புல்தரை மேலே மகனை ஒட வைத்தார். இந்த அதிசயமான கருவியைக் காற்றிலே பறக்க விடுவோம் என்று கீழ்மூச்சு மேல் மூச்சு வாங்க தகப்பனும் மகனும் ஓடியபோது, காற்றாடி இருண்ட மேகங்களை நோக்கிப் பறந்தது.

இடிகளை முழக்கும் கார்காலக் கருமேகங்களை நோக்கிப் பறந்த காற்றாடியில் எந்தவித பயனும் தென்பட-