பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

பெஞ்சமின் ஃபிராங்ளினின்

வில்லை. தகப்பனாருக்கும் மகனுக்கும் ஏமாற்றம்தான் மிஞ்சியது.

அப்போது மழை தூற்றல் போட்டது. இருவரும் அணிந்திருந்த உடைகளோடு நனைந்தார்கள். நூல் கண்டைச் சுற்றிக் கொண்டு வீட்டுக்குப்போக முடிவெடுத்தார்கள்.

திடீரென்று பெஞ்சமின் பிடித்திருந்த காற்றாடி நூலின் பிசிறுகள், மிரண்டு போன நாய் ஒன்றுக்கு மயிர் கூச்செடுத்து குத்திட்டு நிற்பது போன்று விரைந்து, நிமிர்ந்து நிற்பதைப் போன்ற ஓர் உணர்வைப் பெற்றார்.

மகனே, இதோ பார், ‘இது வேலை செய்யத் தொடங்குகிறது’ என்றார்.

அதே நேரம் அவருடைய கையில் பிடித்திருந்த இரும்புச் சாவியில் இருந்து ‘கிலுகிலு’ப்பு மூட்டியது. அந்த உணர்ச்சி அவருக்கு ஒரு மயக்கத்தை ஊட்டியது. ஆனால், அதை அவரால் வருணனை செய்து வெளியே சொல்ல முடியாத நிலையிலே பெஞ்சமின் இருந்தார்.

மழை பெய்யத் தொடங்கியவுடன், நூல் நனைந்தது. மனவில் இருந்த மின்சாரம் என்விதத் தடையுமில்லாமல் சாவியின் மூலம் பாய்ந்து அவரைத் தாக்கத் தொடங்கியது. அப்போது தனது கையிலிருந்த கண்ணாடி புட்டியிலே, மின்சாரப் பொறிகளை அதற்குள் பிடித்து அடைத்து விடுவதிலே முனைந்தார்; வெற்றியும் பெற்றார்.

மின்சார இயக்க வரலாற்றிலே அன்று பெஞ்சமின் சாதித்த சாதனை வரலாறு மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

பெஞ்சமின் ஃபிராங்ளின் இவ்வாறு மின்சாரத்தை சிறைபடுத்திய சம்பவத்தைக் கேள்விப்பட்ட யேல் பல்-