பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

பெஞ்சமின் ஃபிராங்ளினின்

இலண்டன் மாநகரிலே அவர் தங்கியிருந்தபோது பென்சில்வேனியா சட்டசபைக்காக சந்தர்ப்பம் கிடைத்த எல்லாம் இங்கிலாந்து முடியரசோடு வாதாடி வந்தார். ஆங்கிலக் கவர்னர்களுக்கும் சட்டசபை உறுப்பினர்களுக்கும் இடையே இருந்துவந்த தகராறுகளை சமாதானத்தை உண்டாக்கவும் அரும்பாடுபட்டார்.

அமெரிக்க குடியேற்ற நாடுகளின் உரிமைகளைக் காப்பதற்காகப் போராடியவாறே சமாதானத்தையும் நிலை நிறுத்ததிக்கொண்டு, அதே நேரத்தில் பிலடெல்பியாவிலே உள்ள தமது வீடு, குடும்பம், நண்பர்கள் எல்லோரையும் விட்டுவிட்டுப் பிரிந்து பல ஆண்டுகள் வேதனையோடும் இருந்தார். அதே நேரத்தில் அவர் யாருக்காக தூது வந்தாரோ அவர்களின் கட்சியும் அங்கே அவ்வளவு பிடித்தமானதாக இயங்கவில்லை. என் செய்வார் பாவம். இரு கொள்ளிபோலவே அவர் வாழ்ந்து வந்தார். அவர் தயாரித்த திட்டங்கள் எல்லாம் வெற்றிபெறாமல் குழப்பங்களிலே பாழாகிவிட்டன. அவருடைய பிலடெல்பியா வீட்டைத் தீயிட்டுக் கொளுத்தி விடுவதாகவே அங்கிருந்து அரசியல் வெறியர்கள் மிரட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

அவருடைய குடும்பத்துக்கு அவர் எழுதிய கடிதங்கள் எல்லாம் பிரித்துப் படிக்கப்பட்டுக் கொண்டிருப்பதையும் பெஞ்சமின் கேள்விப்பட்டார். அதனால் திட்டங்கள் தோல்வியடைந்ததையும் எண்ணி, மீண்டும் ஊர் திரும்பி விடுவோம் என்ற எண்ணமும் பெஞ்சமினுக்குத் தோன்றியது. ஆயினும், லண்டனிலே தனது ஒப்பந்த திட்டங்களுக்காக போராடியே வந்தார். தாய்நாட்டில் உள்ள கட்சியினரையும் பொறுமையோடு இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஆனால், ஆங்கிலேய சட்டசபை குடியேற்ற நாடுகளுக்கு விதித்த எந்த வரிகளையும் குறைக்காமல், மேன் மேலும் அதிகமான வரிகளை விதித்து வந்ததால், அமெரிக்க