பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

பெஞ்சமின் ஃபிராங்ளினின்

காங்கிரசிலே டெபுடியாக ஆக்கப்பட்டு விட்டார். துப்பாக்கி ஒன்றை அவர் ஏந்தவில்லையே தவிர, மற்ற உடல், உழைப்பு, உயிர் மூன்றையும் அமெரிக்க குடியேற்ற நாட்டுக்காகத் தியாகம் செய்தபடியே வாழ்ந்தார்.

உடலெங்கும் கட்டிகள், ஆங்காங்கே தோன்றி அவரை படுத்த படுக்கையிலே நோயாளியாக வாட்டி வந்தது. இந்த லட்சணத்திலே GOUT என்ற கீல் வாத நோய் பீடித்து விட்டது. அதனால், டவாலி போட்ட வேலைக்காரர்கள் இரன்டு பேர், பல்லக்கு போன்ற அவருடைய நாற்காலியிலே உட்காரவைத்து சுமந்து கொண்டு, அவரை காண்டினெண்டல் காங்கிரஸ் நடத்தும் திட்டங்களில் கலந்து கொள்வதற்காக, அரசாங்க மாளிகை வாசலுக்கு அவர் வந்து விட்டால் போதும், மக்கள் அவரைப் பார்க்கப் பெருங்கூட்டம் கூடிவிடுவார்கள் என்று சுமந்து செல்வார்கள்.

பல்லக்கு போன்ற நாற்காலிதான் அக்காலத்திலே பிலடேல்பியால் இருந்த கார் வசதி. இரண்டு தண்டுகளின் மீது பொறுத்தப்பட்டிருந்த அந்த நாற்காலியை, திட உடம்போடுள்ள அவரை வேலைக்காரர்கள் தங்களதுதோள்களிலே சுமந்து கொண்டு வருவார்கள். கீல்வாத நோயும் உடன் வாட்டிக் கொடுமைபடுத்தியதால் தான், அவரால் நடக்க முடியாமல் நாற்காலியில் தூக்கிச்செல்லும் வாதநோயம் கடன்: பாட்டிக் கொடுடைப்படுத்தியதால் தான், அவரால் நடக்க முடியாமல் நாற்காலியில் தூக்கிச்செல்லும் நிலைக்கு வந்து விட்டது, பாவம்!

அமெரிக்கப் புரட்சியை பெஞ்சமின் ஃபிராங்ளின் ஆதரித்தார் என்பது ஒன்றே, அந்த புரட்சியின் மீது உலகம் அதிக அக்கறையைக் காட்டியது எனலாம். இருந்தும், அமெரிக்க குடியேற்ற நாடுகளில் வசித்து வந்த மக்களில் பலர் புரட்சிக்கு விரோதிகளாகவே இருந்தார்கள். அதனால்தான், இங்கிலாந்தின் ஆங்கிலேயர் ஏஜமானர்களுக்கே விசுவாசிகளாக வாழ்ந்தார்கள்.