பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

65

அமெரிக்காவின் விடுதலைக்கு கையெழுத்திட்டவர்கள் யார் யார் என்பதைப் பார்த்தாலே எத்தனைபேர் அந்த சுதந்திரத்துக்கு உண்மையாக உழைத்தவர்கள் என்பதை நம்மால் திட்டவட்டமாக அறிந்து கொள்ளமுடியும்.

பெஞ்சமின் ஃபிராங்ளினைப் பற்றி, மற்றொரு அமெரிக்க விடுதலை விரும்பியான தாமஸ் ஜெபர்சன் என்ன கூறுகிறார் தெரியுமா?

“ஃபிராங்ளின் பத்து நிமிடங்களுக்கு மேல் சேர்ந்தாற் போல ஒரே சமயத்தில் பேசி நான் கேட்டதே இல்லை. அது மட்டுமல்ல, விவாதத் தீர்மானத்திற்கு வரக்கூடிய மூலாம்சமான விஷயத்தைத் தவிர, வேறு எதைப் பற்றியும் அவர் பேசிக் கேட்டதில்லை” என்கிறார் என்றால், அமெரிக்காவின் விடுதலை மீது எத்தகைய அக்கறையும் அன்பும் பெஞ்சமின் வைத்திருந்தார், என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

ஆனால், இக்கட்டான பிரச்னைகள் வரும்போது எல்லாம் பெஞ்சமின் அடிக்கடி வேடிக்கையான கதைகளைக் கூறுவார். அனைவரும் அதை விரும்பிக் கூடிக் கேட்பார்கள். பேச்சுக்கலையிலே நகைச்சுவையாகவும், வேடிக்கையாகவும் பேசுவதிலே ஃபிராங்ளின் மிக சாமர்த்தியம் வாய்ந்தவர்.

அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தைப்பற்றிய பேச்சுக்கள், அந்த விடுதலை இயக்கங்களிலே பிரச்னையாக வரும் போது எல்லாம், அந்தப் பிரகடனத்தின் முக்கியக் கர்த்தாவான, தாமஸ் ஜெபர்சனின் பக்கத்திலே ஃபிராங்ளின் இருந்தார்.

ஏனென்றால், சுதந்திரப்பிரகடனம் உருவானபோதும், அதுபற்றி விமர்சனம் செய்யும்போதும், அதன் ஒவ்வொரு

ந. மே-5