பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

71

வால்டேரும்-ஃபிராங்ளினும்

பிரான்ஸ் நாட்டில் அக்காலத்தில் வாழ்ந்த மாபெரும் மனிதர்கள், தத்துவ ஞானிகள், அரசியல் வாதிகள், இராச் தந்திரிகள், வரலாற்றாசிரியர்கள் அனைவரும் ஃபிராங்ளினைச் சந்திக்க விரும்பினார்கள்.

பிரெஞ்சு தத்துவஞானியான வால்டேர், ஃபிராங்ளினைத் தனது வீட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். தனது மகன் வில்லியத்தையும் உடன் அழைத்துக்கொண்டு வால்டேர் வீட்டுக்குப் போனார்.

பெஞ்சமின் ஃபிராங்ளின் வருவதைக் கேள்விப் பட்ட பேனா மன்னர் வால்டேர், நோயுற்றுக் கிடந்ததையும் பாராமல், தள்ளாமையால் வயதான கிழவரான அந்தப் பெருமகன், நாற்காலியில் சாய்ந்து எதிர்பார்த்து இருந்தார்.

பெஞ்சமினும் அவரது மகனும் தனது வீட்டுக்கு வந்த போது இருவரையும் அவர் வணக்கம் கூறி வரவேற்றார். பிறகு வால்டேர், ஃபிராங்ளினைப் பார்த்த உடனே, ‘ஓ, சுதந்தரமே, சொர்க்க ஒளியுடன் தோன்றும் சுதந்திரத் தாயே!’ என்று கூறி வணங்கி அவர்களை வால்டேர் வரவேற்றார்.

உடனே ஃபிராங்ளின், ‘இவன் எனது பேரன், தாங்கள் வாழ்த்துவீர்களாக?’ என்று பணிவாகக் கேட்டார்.

‘ஆண்டவனும் சுதந்திரமும் இதுதான். தங்களது பேரனுக்கு பொருந்தக்கூடிய அருள் வாழ்த்து’ என்று கூறி வாழ்த்தினார் வால்டேர்.

‘எனக்கு மற்றொரு பேரன் உண்டு. அவன் அமெரிக்காவிலே இருக்கின்றான். அவனையும் எனது பேத்தி பாச்சியையும் அருள்கூர்ந்து வாழ்த்துங்கள்’ என்றார் பெஞ்சமின்