பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

பெஞ்சமின் ஃபிராங்ளினின்

இதைக் கேட்ட வால்டேர், அவர்கள் இருவரையும் நாற்காலியில் சாய்ந்த முதுமை நிலையோடு “சுதந்திரமும்-சமத்துவமும்” என்று வாழ்த்தினார்.

இந்த ‘சுதந்திரமும் சமத்துவமும்’ என்று. பெஞ்சமின் பேரப்பிள்ளையினையும், மகனையும் வாழ்த்திய அந்த வாழ்த்துச் சொற்கள்தான், பிரெஞ்சுப் புரட்சியின் மக்களிடம் எதிரொலித்த வெற்றி முழக்கங்களாகிய சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கோஷங்களுக்கு மூலாதாரமான துவக்கச் சொற்களாக அமைந்தன. இறுதியில் வால்டேரும், பெஞ்சமினும் பிரியா விடைபெற்றப் பிரிந்தார்கள்.

பிரெஞ்சு மன்னரான பதினாராம் லூயியை மீண்டும் பெஞ்சமின் சந்தித்து; அமெரிக்கா செல்ல விடை கேட்டார். அப்போது, மன்னர் தனது உருவத்தைப் பொறித்ததும், நானூறு வைரக் கற்களைப் பதித்ததுமான ஒரு மதிப்புள்ள பதக்கத்தைப் பரிசாகத் தந்து விடைகொடுத்து மன்னர் பதினாராம் லூயி பெஞ்சமினை அனுப்பி வைத்தார்.

பெஞ்சமின் மன்னரிடம் விடைபெற்றுப் போகும் போது, “நீங்கள் சென்றுதான் ஆகவேண்டுமா?” என்று கேட்டார். ‘ஆம்’ என்று அவர் கூறவே, பிரான்ஸ் நாட்டின் கடற்கரைவரை தங்களுக்குரிய பாதுகாப்புக்காக, உங்களுடைய பல்லக்கை எனது ராஜபட்டம் அணிந்த குதிரைகள் இழுத்துச் செல்லும் ஜாக்கிரதையாகச் சென்றுவாருங்கள்’ என்று பதினாறாம் லூயி மன்னர் கூறி வழியனுப்பி வைத்தார்.

பெஞ்சமின் ஊர்வலமாகப் புறப்பட்டார். ஆயிரக்கணக்கான மக்கள் வழியெல்லாம் கூடி நின்று மலர் மாலைகளைச் சூட்டி, வாழ்க என்ற வாழ்த்தொலியோடு கடற்கரைவரை சென்று கப்பலேற்றி பெஞ்சமினையும் அவரது மகன் வில்லியத்தையும் வழியனுப்பி வைத்தார்கள்.