பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

73

பிலடெல்பியா நகர் வந்து சேர்ந்த பெஞ்சமின் ஃபிராங்ளின், தனது வீட்டுப் படிக்கட்டுகளை ஏறும்போது, தனது தள்ளாத வயதால் தவறிக் கீழே விழுந்தார். அதிலிருந்து அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிறு காய்ச்சலுக்குப் பிறகு 1790-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், 17ம் தேதியன்று அவர் உயிர் துறந்தார்.

ஃபிராங்ளின் சவப்பெட்டியின் பின்னாலே, பல்லாயிரக் கணக்கான பிலடெல்பியா நகர மக்கள், பெரிய பிரமுகர்கள் வரிசை வரிசையாக, சோகமும் துயரமும் கவ்விய நடையோடு அனைவரும் சென்றார்கள். அவரது சவ ஊர்வலத்திலே பிலடெல்பியா நகரில் அவ்வளவு மாபெரும் மக்கட் கூட்டம் இதற்கு முன்பு யாருக்கும் கூடியதில்லையாம்!

மனிதன் என்பவன் யார்? அவன் தனது வாழ்வுக்காகவும், தான் வாழும் மக்கட் சமுதாயத்துக்காகவும், தனது நாட்டின் முன்னேற்றத்துக்காகவும், ஆற்றிய செயற்கறிய செயல்கள் எல்லாம் சேர்ந்து பெஞ்சமின் ஃபிராங்ளினை ஒரு சிறந்த சிந்தனை புத்தகமாக, நமக்கெல்லாம் நற்றொண்டு பாடங்களாக அமைந்துவிட்டதைக் கண்டார்கள் மக்கள்.

‘எங்கு சுதந்திரம் வாழ்கிறதோ; அங்கேதான் எனது தேசம் இருக்கிறது’ என்ற தாரக மந்திரத்தை ஓதிய மாபெரும் மனித ஞானி, இறுதியில் அமெரிக்க மண்ணிலே சமாதி ஆனார்.

பெஞ்சமின் ஃபிராங்ளின் புதைக்கப்பட்ட இடத்திலே, தான் இறந்து போனால், தனது கல்லறையிலே என்ன எழுத வேண்டும் என்பதையும் முன்கூட்டியே கி.பி. 1728ம் ஆண்டே எழுதி வைத்திருந்தார். அந்த மரண சாசனம் இது. படியுங்கள்! கண்ணீர் சொரியுங்கள்!

“அச்சாளரான இந்த பெஞ்சமின் ஃபிராங்ளினின் உடல், ஒரு பழைய புத்தகத்தின் மேலட்டையைப்