பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

பெஞ்சமின் ஃபிராங்ளினின்

வீதிகளிலே இரவு காலங்களில் மக்கள் பயமின்றி நடக்கும் நிலை ஏற்பட்டது.

9. ஊர்களிலே, தெருக்களிலே, குடிசைப் பகுதிகளிலே எதிர்பாராமல் தீ பிடித்துக் கொண்டால் அதனைத் தடுக்கும் FIRE PREVENTION என்ற தீயணைப்பு படையை உலகிலே முதன் முதலாகக் கண்டு பிடித்து பெஞ்சமின் இயங்க வைத்தார்.

10. போலீஸ் துறையினர் கள்ளச்சாராயத்திலே புகுந்து போதையேற்றிக் கொண்ட பழக்கத்தையும், கூலிக்கு போலீஸ் படை அமர்த்திக்கொள்வதையும் மாற்றி, அவர்களை நிரந்தர சம்பளப் படையாகவும், நம்பிக்கைப் படையாகவும் அமர்த்தும் சீர்திருத்தங்களை முதன்முதலில் செய்தார் பெஞ்சமின்.

11. புத்தகங்களால் மக்களுக்கு அறிவு பரவும் என்பதற்காக நண்பர்கள் மூலம்பெற்ற புத்தகங்களைச் சந்தா முறையில் பெருக்கி, அவற்றை மக்களிடையே படிக்கவும், சுற்றுலாவுக்கு விடவுமான ‘லெண்டிங் லைப்ரரி’யை முதன் முதலாகக் கண்டுபிடித்து மக்களிடையே புத்தகம் படிக்கும் பழக்கத்தை உருவாக்கினார்.

12. பென்சில்வேனியா நகரில் உள்ள முதலாவது வைத்திய சாலையை உருவாக்கிட போராடியவர்களிலே அவர் முதல் மனிதராக நின்றார்! கடுமையாக உழைத்தார்.

13. பெஞ்சமின், போஸ்ட்மாஸ்டர் ஜெனரலாகப் பதவி பெற்றார். அதுவரை அந்த துறை நட்டத்திலேயே நடந்து வந்தது. அதை லாபகரமாக மாற்றவும், வீடுகளுக்கே வந்து தபால் வழங்கும் முறையைப் போல அன்றே ஏற்பாடு செய்தார். தபாலாபீசிற்கு வந்து மக்கள் தபால்களைப் பெறாவிட்டால் அவற்றை ஒரு கிடங்கிலே சேமித்து வைத்து நினைத்தபோது அவற்றைப் பெற்றிட D. L. O. அதாவது ‘டெட் லெட்டர் ஆபீஸ்’ என்ற ஒரு பிரிவை