பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

பெஞ்சமின் ஃபிராங்ளினின்

◯ மங்கையர், மது, சூது, பித்தலாட்டம் எல்லாம் செல்வத்தைத் தேய்க்கும் படைகள். தேவைகளைப் பெருக்கும் நோய்கள்.

◯ நேரம்தான் பணம் என்பதை நினைவிலே நிறுத்து! அதற்கேற்ப உழை! கணக்கில் இருப்பதும் பணம்தான்! ஞாபகத்தில் வை.

◯ பணம் என்பது குட்டிபோட்டு இன விருத்தி செய்யும் இயற்கையானது என்பதை மறந்து விடாதே.

◯ பணம் குட்டி போடும். அந்தப் பணம் மேலும் பல குட்டிகளை ஈன்று இனம் பெருக்கும்! எனவே, பணம் பிரசவிக்கும் ஓர் ஜீவன்!

◯ நூறு பணத்தை முதலில் சம்பாதித்து விட்டால், அடுத்த நூறு பணம் சம்பாதிப்பது மிகச் சுலபமாகும்.

◯ கடன் வாங்காதே! அதை வாங்கியவர்களை விட கொடுத்தவர்களுக்கு நல்ல நினைவாற்றல் உண்டு மறக்க மாட்டார்கள்.

◯ இந்த உலகில் சாவையும் வரியையும்விட வேறு எதுவும் நிச்சயம் இல்லை.

◯ வறுமைதான் பெரும்பாலும் மனிதனிடமுள்ள நல்ல பண்புகளையும் ஜீவனையும் தின்று விடுகின்றது.

◯ உலகம் என்பது சக்கரம்! அது சுழன்று சுழன்று நேராகவே வந்து சேரும்.

◯ மறுபடியும் ஒருமுறை வாழ எனக்கு வாய்ப்பு வந்தால், மீண்டும் துவக்கம்முதல் இறுதி எல்லைவரை ஓடி, அதேவிதமான வாழ்க்கையிலே மறுபடியும் வாழத்தயாராக உள்ளேன். ஆனால் நான் கேட்பது எல்லாம் ஒரு புத்தக ஆசிரியனுக்குரிய சலுகைதான். அதாவது முதற்பதிப்பில் விட்டுப்போன சில தவறுகளை மறுபதிப்பில் திருத்திக்