பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

7

தபாலாபீசில் உருவாக்கினார். அந்த முறை இன்றும் நம் நாட்டில் உள்ளதைப் பார்க்கிறோம்.

14. அமெரிக்க, தத்துவ ஞானிகள் சங்கத்தைத் துவக்கி வைத்தார். அந்த சங்கம் ஏறக்குறைய 220 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் பிலடெல்பியா நகரிலே இயங்குவதைப் பார்க்கலாம்.

15. ஒரு நாட்டுக்கும், நகரத்துக்கும் உள்நாட்டுப் பாதுகாப்பை மக்களிடம் வற்புறுத்திக்கூறி, பென்சில்வேனியாவில் முதன் முதலாக மக்களைத் திரட்டி குடிமக்கள் படைகளை பெஞ்சமின் ஆரம்பித்தார்.

16. பெஞ்சமின் ஃபிராங்ளின் முதன்முதலாக, பதின்மூன்று மூல குடியேற்ற நாடுகளின் ஒற்றுமையைப் பற்றிச் சிந்தித்தார். அதற்காக தனது சிந்தனை, எழுத்து, பேச்சு அனைத்தையும் மக்களிடையேயும், அதிகாரிகளிடையேயும் அடிக்கடி கவனமூட்டி வாதாடி ஒரு புதிய தொடர்பை அந்நாடுகள் இடையே உருவாக்கிக் காட்டினார்.

17. பிலெடல்பியா நகரில் அதுவரையில் கேட்டிராத ஒரு பைத்தியக்காரர்கள் ஆஸ்பத்திரியை மனநோய் நல மருத்துவமனை என்ற பெயரிலே புதிதாகவே உருவாக்கினார்.

18. இன்றுள்ள வீடுகளிலே எல்லாம் ஸ்டவ் என்ற ஒரு சூட்டடுப்பு உள்ளது என்றால், அதை முதன்முதலாகக் கண்டுபிடித்துக் கொடுத்து, அதன் வாயிலாக இன்றும் சூடேற்றும் கருவிகளுக்குரிய வளர்ச்சிகளுக்கு வழிகாட்டிய வரும் பெஞ்சமின்தான்.

19. முதன் முதலாக மின்சார பேட்டரியை அவர்தான் கண்டுபிடித்துக் கொடுத்தார். மின்சாரத்தில் பாசிட்டில், நெகட்டிவ் என்ற இரண்டுரக ஓட்டங்கள் இருக்கின்றன என்று குறிப்பிட்டுக் காட்டியவரே ஃபிராங்ளின்தான். அம்