பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 டாக்டர் எஸ். நவராஜ செல்லையா நாளைய ನಾಕ್ರ இன்று ஏன் இவ் வளவு பயிற் சிகளைச் செய்ய வேண்டும் என்று எதிர் வினா எழுப்புபவர்களும் உண்டு. திட்டமிடப்படாத செயல் எவ்வாறு செம்மையாக நிறைவேறாமல் சீரழிவுக்கு உள்ளாகுமோ, அது போலவே, திட்டமிட்டு வருங்கால வாழ் வுக் குப் பயனளிக்கும் உடலைத் திறமுள்ளதாக ஆக்கிக் கொள்ளாதவர்கள் வாழ்க்கை, நோயிலும் பாயிலுமே கழிந்து போகும். இவை வாழ் வின் இன்பத்தை அனுபவிக்க முடியாமல் அழித்து விடும். இந்த உண்மையைப் பெண்கள் புரிந்து கொண்டால், குதூகலமான குடும்பத்தை உருவாக்கிட முடியும். குதுகலம் நிறைந்த குடும்பமே, சக்தி நிறைந்த சமுதாயத்தை உருவாக்கிட முடியும். எல்லா துறைகளிலும் முன்னேறி வரும் பெண் இனம் மேலும் தங்களை வலிமையுடையவர்களாக, வனப்பு மிகுந்தவர்களாக எதையும் ஏற்றுத் திறம்பட செயலாற்றும் ஆற்றல் படைத்தவர்களாக வாழ்ந்து, சமுதாயத்திற் குச் சிறந்த தொண்டாற்ற வேண்டும் என்றே எதிர்பார்க்கிறோம். நாடாளும் நங்கையர்கள், விளையாட்டுத் துறை யில் சாதனைகள் புரியும் வீராங் கனைகள், அறிவியல் துறையில் அறிவார்ந்த விஞ்ஞானிகளாய் பணியாற்றும் மேதைகள், மற்றும் சகலதுறைகளிலும் சரிநிகர் சமானமாக சாதனை புரியும் பெண்களின் சரித்திரம் நமக்கு எல்லாம் தெரிந்ததுதானே! - o == o o - - - நோயில்லா கமங்கைகளை பெற்றுவிது மட்டுமல்ல