பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்களும் பேரழகு பெறலாம் 99 ஒரு தாயின் கடமை! அவர்களை சீலம் மிகுந்தவர்களாக, வீரமும் விவேகமும் நிறைந்தவர்களாக வளர்த்து ஆளாக்கும் பொறுப்பு அத்தனையும், பெண்களுக் குத்தானே என்பது வெள்ளிடை மலையாக அல்லவோ விளங்கி வருகிறது. 'ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே' என்று ஒரு தாய் புறநானூற்றுப் பாடலில் கூறுகிறாள். இன்றைய சமுதாய அமைப்பு, பிள்ளைகளைப் பெற்றுத் தருவதுடன் நின்று போய் விடவில்லையே! ஆண்கள் மட்டுமே ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்து கொள்ள முடியும் என்று கிரேக்க நாடு சட்டம் தீட்டிநடத்தியபோது, மரண தண்டனையையும் பொருட் படுத்தாது மகனுக்கு குத்துச் சண்டை பயிற்சியளித்து, ஆண் வேடமிட் டு பந்தய மைதானத்திற் குப் போய் பார்த்த வீரமங்கையின் சரித்திரம், சிறந்த தாய்க்கு எடுத்துக் காட்டாவாள். என் மகன் எந்தப் போர்க்களத்தில் போரிடுகிறான் என்று எனக்கே தெரியாது என்று புறநானூற்றுத் தாய் ஒருத்தி கூறுகிறாள் என்றால், நாடு காக்கும் போரில் தன் மகனின் நல்ல ஒர் பணியினை ஆற்றிட தான் பெருந்துணையாய் இருந்திருக்கிறாள் என்பது தானே பொருள். ~ : るエ † | يخصيره # தேவைகளும் சேவைகளும் சமுதாயத தற கு தேவைப் படுகின்ற இக் காலத்தில் , பெண்கள் அனைவரும் தங்கள் உடலைத் திறமாக, தரமாக, 1ெளமாக, நலமாக வைத்துக் கொண்டு வாழ் வதை