பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறை இலக்கியத்தின் தந்தை என்றும், பல்கலைப் பேரறிஞர் என்றும் பாராட்டப்படுகின்ற, டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா அவர்கள், விளையாட்டுத்துறை தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கான பணியைத் தனது வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு, பணியாற்றி வருகிறார். விளையாட்டு பற்றிய கட்டுரை, கவிதை, சிறு கதைகள், நாவல் மற்றும் தனி மனித முன்னேற்றம் பற்றிய அறிவு நூல்கள், ஆய்வு நூல்கள் என இதுவரை 150க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். - - விளையாட்டுத் துறையில் மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாகவும், விருப்பத்துடன் பங்கேற்கவும் உதவும் வண்ணம், 20 வருடங்களாகத் தொடர்ந்து 'விளையாட்டுக் களஞ்சியம்' என்ற மாத இதழை (1977 முதல்) நடத்தி வருகிறார். விளையாட்டு இசைப் பாடல்கள், உடற் பயிற்சிக்கான இசை ஒலி நாடா போன்றவற்றை மாணவ மாணவியருக்காக இயக்கி, இசையமைத்து, நடித்து, தயாரித்துத் திரையிட்டுள்ளார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதன் முதலாக விளையாட்டுத் துறையில் ஆய்வறிஞர் (Ph.D) பட்டம் பெற்றவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. இவரது மூன்று நூல்கள் தேசிய விருதும், ஒரு நூல் தமிழ்நாடு அரசின் பரிசினையும் பெற்றுள்ளது. கீதா ஆப்செட், சென்னை - 600 014. : 8414161