பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 டாக்டர் எஸ். நவராஜ செல்லையா அழகும் கவர்ச்சியும் அழகு என்று ஏன் கூறுகின்றீர்கள் ? கட்டான உடலும் கவர்ச்சியும் தானே தேவை என்று கேட்கலாம்! கவர்ச்சி என்பது, தீடீரென்று வந்து, இருந்து, பின் விரைவிலே மறைந்து போவது. கவர்ச்சியாயிருந்த உடல் மங் கிவிட் டால் , காண்பதற் குக் சிவ ட அருவெறுப்பைத் தரும். ஆனால் அழகு என்பதன் பொருளே வேறு. அழகு என்பது உடலுக்கு வந்து, இருந்து, நின்று நிலைத்து விடுவது. இயற்கை காட்டுவது அழகு. மேகம் காட்டுவது கவர்ச்சி. காற் றடித்தால் மேகம் கலைந்து விடும். கவர்ச்சி அழிந்து விடும். இயற்கைக் காட்சியோ என்றும் இன்பத்தைத் தரக் கூடியதாகும். ஆகவே, பெண் களுக்குக் கவர்ச்சியைவிட, அழகுதான் பெறற் கரிய சொத்தாகும். பெண்களின் உடலில் , முகத்தில் இருக்கின்ற மினுமினுப்பு - பெண்களுக்கு மட்டுமே ஆண்டவன் அருளிய அருங் கொடையாகும். அவர்கள் உடலிலே அடைந் திருக்கும் உள் சுரப் பிகள் சுரக்கின்ற திரவத்தினால் பெறக்கூடிய அந்த சக்தியை, உடலை இயற்கையாக இயக்குவதின் மூலமே சிறப்பாகப் பெற முடியும். அந்த ஆற்றலை முறையோடு கற்றுக் கொண்டோ மானால், வளர்த்துக் கொண்டோமானால் இயற்கை தரும் இனிய சக்தியோடு, எழிற் கலையும் சேர்ந்து, உங்களை ஏற்றமுடன் வாழச் செய்யும் மனமும்