பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்களும் பேரழகு பெறலாம் 13 அமைதியுடன் வாழும். வாழ்க்கையின் குறிக்கோள் இன்பமே. இன்பம் என்பது நலமான உடலில் தான் வரும். சிறப்புடன் நாம் வாழ் கிறோம் என்றால் , உடலில் நலமும் பலமும் பெற்று வாழ்கிறோம் என்பதே பொருள். அந்த உடல் வளமும், உன்னத அழகும் இயற்கையாகவே நமக்குக் கிடைக்கிறது. ஆனால் செயற்கை வாழ்வில் புகுந்து, நாகரிகம் எனும் புதுப்பாதையில் நடந்து, நம்மை நாமே நலிய வைத்துக் கொள்கிறோம். நான்கு பேர் செய்வதையே நாமும் செய்கிறோம் என்று நம்மை நாமே நம்ப வைத்து, அதனால் வீட்டுக் குள்ளே வெந்து, வேதனையால் துடிக்கும் போது கூட நாமே சமாதானம் செய்து கொள்கிறோம். கண் வலிக்கிறது என்று உணர்ந்த பிறகும் கூட இருட்டிலும் கருப்புக் கண்ணாடியை அணிந்து கொண்டு, காட்சி தருகின்ற கன்னியர்களையும் காளையர்களையும் தினமும் காண்கின்றோம். அவர்கள் காலம் செல்லச் செல்ல கண் நோயால் அவதிப் படும் போது, பிறருக் கென்று வாழ்ந்த வாழ் வு, இப்பொழுது வந்து உதவி செய்யுமோ? செய்யாது. நாகரிகம் என்பது செயலில் புதுமை வேண்டும் எனும் நோக்கத்தால் எழுந்தது. அந்தப் புதுமையான செயல், உடலுக்கும் வாழ்வுக்கும் புத்துணர்ச்சியூட்ட வேண்டுமே தவிர, வாழ் வில் பூகம் பத் தைத் தோற்றுவிக்கக் கூடாது.