பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்களும் பேரழகு பெறலாம் 15 பெண்களும் உடற் பயிற்சியும் ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள உடலமைப்பை பார்க் கும் போதே, நிறைந் திருக்கும் வேறுபாடுகள் நமக்கு நன்கு புரியும். உருவ அமைப்பில், உறுப்புகளின் தன்மையில், உணர்ச்சி முறைகளில், மனோதன்மை மற்றும் சில முறைகளில், ஒரு குறிப்பிட்ட மாறுபாடும் உண்டு. ஆகவே, ஆண்கள் செய்கின்ற அத்தனைப் பயிற் சிகளையும் பெண்கள் செய்யக் கூடாது. செய்யவும் முடியாது. உடலில் இடுப்பின் அமைப்பும், தசைகளின் அமைப்பும் கூட மாறுபட்டிருக்கின்றன எனவே, பெண்களுக்குரிய உடலமைப்புக் குப் பொருந்து வனவாக, தசைகளுக்கு ஏற் றனவாக, பயிற்சிகளைப் பெறுவதுதான் சிறந்த முறை. ஆண்கள் உடல் வலிமை உள்ளவர்கள். ஒரே சமயத்தில் அதிக எடையைத் தூக்க முடியும். முயற்சியுடன் வலிமையைப் பயன்படுத்தி முரட்டுத் தனமான காரியங்களில் ஈடுபடவும் முடியும். அதே சமயத்தில் , ஆண்கள் பெண்களை விட உடலமைப்பிலும் பெரியவர்களே. பெண்களுக்குரிய உடலமைப்பைப் பார்க்கும் போது, மேலழகில் கவர்ச்சியுடனும், உள்ளுறுப்புக் களில் வலிமை மிக் கவர்களாகவும் பெண்கள் வாழ் கின்றார்கள். விரைவிலே தளர்ச்சி அடைந்து விடுபவர்கள்தான் என்றாலும் சிறிது நேர ஒய்விற்குப் பிறகு, விரைவிலே களைப் பு நீங்கி, மீண்டும்