பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்களும் பேரழகு பெறலாம் 35 காற்றை உட்கொள்கிறோம். தூய்மையிழந்த காற்றை நாம் வெளியே விடும் போது பாதியை மூக்கின் வழியாகவும், மீதியை வாய் வழியாகவும் விடலாம். வாய் வழியே மூச்சு விடுவது தவறல்ல. அதனால் பயனுண்டு. வாய் வழியாக மூச்சு விடுவதால் , கன்னத்தின் தசைகள் அதிகமாக இயக்கம் பெற்று, மழமழப்பாக வரவும் உருண்டு திரண்டு முழுமை பெறவும் வழி ஏற்படுகிறது. பயிற்சி செய்யும் போது, மூக்கின் வழியே மட்டும் வாயை மூடிய நிலையில் மெதுவாக விட்டுக் கொண்டேயிருந்தால் , கன்னங்கள் ஒட் டிப் போக வாய்ப்பு உண்டு. ஆகவே, பயிற்சி காலத்தில் மட்டும் அதிகமாகக் காற்றை உட்கொண்டு, மூச்சுவிடும் போது சிறிதளவு வாய் வழியாகவும் விடும் பழக்கத்தை மேற்கொள்ளுதல் நல்லது. உணவு, உடை, உறக்கம், உறையுள் தூய்மையாய் இருத்தல் , அலங்காரங்கள், எல்லாம் எவ்வளவு அவசியம் என்று நினைத்தார்களோ அவ்வளவு முக்கியம் உடற்பயிற்சியும் என்று பெண்கள் நினைக்கத் தொடங்கி விட்டார்கள். ஏனென்றால் 'உடற் பயிற்சிதான் உடலுக்கும் உயிருக்கும் உற்ற துணை என்பது உலகமறிந்த உண்மையாயிற்றே! உடல் நலமாக இருந்தால் தான், அழகோடு அமைந்தால் தான், உடுத்துகின்ற உடைக்கும் பெருமை உண்டு. எடுப்பான தோற்றம் இருக்கும். உண்ணுகின்ற உணவையும் உவப் போடு சுவைத்து உண்ணமுடியும். நிம் மதியாக உறங்க முடியும். அத்துடன் வாழ்க்கை