பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 டாக்டர் எஸ். நவராஜ செல்லையா ншн யையும் ஆனந்தமாக அனுபவிக்க முடியும். பயிற்சியும் உடல் வலியும்! பெறுகின்ற பயன்களை விளக்கிய வுடன், பயிற்சிகளைச் செய்ய வேண்டும் என்ற ஒர் படபடப்பும் துடிதுடிப்பும் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பது புரிகிறது. ஆவலோடு நீங்கள் தொடங்கப் போகின்ற பயிற்சிகளில் ஆர்வம் ஏற்பட்டிருக்கும் போது, பயிற்சி நேரத்தில் பக் குவமாக நீங்கள் நடந்து கொள்ள வேண்டிய ஒரு சிலக் குறிப்புகளையும், தந்தால் மிகவும் பயனுடையதாக இருக்கும் என்று நினைக்கிறோம். முதல் நாள் பயிற்சி செய்யும் போது, இன்னும் பயிற்சி அதிகம் செய்ய வேண்டும். என்ற எண்ணம் அதிகமாகவே தோன்றும் . அப்போது, ஆவலை அடக் கிக் கொள்ள வேண்டும். 'மெல்ல மெல்ல ஊர்ந்தால் கல்லுருக ஊரலாம் ' என்ற பழமொழிக் கேற்ப, பயிற் சிகளைக் கொஞ் சங் கொஞ் சமாகவே செய்து, பிறகு அதிகரிக்க வேண்டும். அதிகமாகச் செய்தால் உடலுக்கு நல்லதுதானே! நீங்கள் ஏன் வேண்டாம் என்று கூறுகின்றீர்கள் என்று கேட்கலாம். பயிற்சியைத் தொடக்கத்திலேயே அதிகமாகச் செய்தால் உடல் முழுதும் வலிக்க ஆரம்பித்து விடும். தசைகள் முழுதும் வலி எடுத்து விட்டால், உங்கள் ஆர்வம் தகராறு செய்ய ஆரம்பித்து விடும். உடலுக்கு வலி ஏற்படாதவாறு பக்குவமான முறையில் செய்து கொண்டே போனால், பயிற்சியும் அதிகம் செய்யலாம். பலனையும் அதிகம் பெறலாம். பயிற்சி செய்த மறுநாள் ஏன் உடல் வலிக்கிறது?