பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்களும் பேரழகு பெறலாம் 37 என்ற சந்தேகத்தை நிவர்த் தி செய்து கொள்வது உங்களுக்கு நல்லது. நம் எலும்புகளுக்குச் சட்டைப்போல் அமைந்திருக் கின்ற தசைகள், திசுக் களால் ஆனவை என்றும் உங்களுக்குத் தெரியும். திசுக்கள் புதியனவாக உண்டாக உண்டாக, பழைய திசுக்கள் அனைத்தும் உடைபட்டுப் போகும். பயிற்சி செய்யுங் காலத்தில், பழைய திசுக்கள் அனைத்தும் தசையிலிருந்து உடைந்து, இரத்த ஓட்டத்தில் கலந்து கழிவுப் பொருள்களாக வெளியேறும். நாம் பயிற்சியை நிறுத் தி விடுகின்ற பொழுது, ஆங்காங்கே திசுக்கள் நின்று தேங்கி விடுகின்றன. அவ்வாறு தேங்கி நிற்கின்ற பகுதிகள் அனைத்திலும், வலி இருக்கத்தான் இருக்கும் . மறுநாள் தொடர்ந்து பயிற்சிகளைச் செய்யும் போது மீண்டும் அவை நகரத் தொடங்குகின்றன. இவ்வாறு திசுக்கள் உடைப்பட்ட பகுதிகளில் புதிய திசுக்கள் வளரத் தொடங்கவும், பழைய திசுக்கள் முழுதும் இரத்த ஒட்டத்தில் நூரையீரலுக்கு சென்று முழு அளவு ஒட்டம் பெற்ற பிறகு, உடம்பில் வலி இருக்காது. ஆகவே, தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் பயிற்சி செய்கிற போது உடலில் வலியும் தோன்றாது. நலிவும் நேராது. உடல் வலிக்கும் போது பயிற்சி செய்யாமல் இருக்கலாம் என்று எண்ணத் தோன்றும். அப்படியே விட்டுவிட்டால், வலி குறைந்து மறைந்து போகும் என்றும் நினைக்கவும் தோன்றும் அது தவறு