பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 டாக்டர் எஸ். நவராஜ செல்லையா பயிற்சியைத் தொடராமல் போனால் வலியும் குறையாது. பயனும் கிடைக்காது. வலி தொடர்ந்து ஒரிரு நாட்கள் வரும். ஆனால் வலியுடன் பயிற்சி செய்தால், செய்யும் பொழுது வெந்நீர் ஒத்தடம் அந்தப் பகுதிகளுக்குத் தருவது போன்ற ஒர் இன்ப (வேதனை) உணர்வு கிடைக்கும். அந்த சுகத்தை அனுபவித்தவர்களுக்குத் தான் புரியும். இன்ப மயமான அந்த நிலை எல்லோர்க்கும் கிடைத்தால், நமது பாரத நாடே நல்ல வலிமை வாய்ந்த சமுதாயத்தைப் பெற்று நலமாக வாழ்ந்து விடும். யார் உணர்கின்றார் இந்த இன்ப நிலையை? தினந் தோறும் பயிற்சி செய்யலாமா என்றால் வாரத்திற்கு ஐந்து நாட்கள் போதுமானது. இரண்டு நாட்கள் ஒய்வு தருவதும் நல்லது தான். உடல் தசைகள் உருவாவதற்கும் வாய்ப்புத் தருவது போல் அது அமையும். ஆகவே, தினந்தோறும் குறைந்தது 10 நிமிடமாவது பயிற்சியைச் செய்து வருவது நல்ல பண்பாகும். பயனுள்ள வாழ்வைப் பெற நாமே நமக்கு வழி வகுத்துக் கொண்டவர்களாவோம். இன்றைக்கு ஒய்வெடுத்துக் கொண்டு நாளைக்கு சேர்த்துச் செய்து விடலாமா என்று நினைக்கக் கூடாது அவ்வாறு நினைத்துச் செயல்பட்டு, உடலை வருத்திக் கொள்ளவும் கூடாது. உடலை வருத்தாமல், வளர்க்க வேண்டும் என்பதை என்றும் நினைவில் வையுங்கள். இயற்கைக்கு மாறாக நடக்காமல், இயற்கை வழியே சென்று, பயிற்சி செய்து, பயன் பெறுக என்று உங்களை உழைக்கிறோம்.