பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_து பெண்களும் பேரழகு பெறலாம் 39 அதற்கு முன், இதோ சில ನಾಗ್ತಿ = பயிற்சி செய்கின்ற எல்லோரும் எதிர்பார்த்த அழகைப் பெறலாம். ஆனால், அது அவரவருடைய உடலமைப்புப் படி தான் அமையும் என்பதை, உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விருப்புகின்றோம். ஒருவருடைய உடல் அமைப்பு, எலும்புகளினால் உருவாக்கப்படுகிறது. அந்த எலும்பின் தன்மையினால் தான், ஒருவருடைய உயரமும் உடல் உருவமும் அமைகிறது. அந்த எலும்புகளுடன் இணைந்திருக்கின்ற திசுக்களால் ஆன தசைகள் தான், அந்த எலும் பு உருவத்தை அழகு செய்கின்றன. . ஆனால் அந்தத் தசைகளால் , அந்த எலும் பின் உயரத்தையோ அமைப்பையோ மாற்றமுடிவதில்லை. மாற்ற முயல்வதுமில்லை என்பதை உணர வேண்டும். உயரமாக இருப்பவர்கள் குள்ளமாக மாறிவிட முயல் வதோ, குள்ள அமைப்புள்ளவர்கள் ( ஒரிரண்டு அங்குலம் உயரலாம்.) அதிகமான உயரமுள்ளவர்களாக மாறிவிட முயல்வதோ முடியாது. இயற்கையை மாற்ற முடியாது. மீறி முயன்றால் அது கோமாளித்தனமாகத் தான் முடியும். எலும்புகளை நீட்டவோ குறைக்கவோ, நம்மால் முடியவே முடியாது. பெண்களுக்குரிய இடுப் பு எலும்பின் அமைப்பு அதிக அகலமாக இருந்தால், அதை சின்ன இடுப்பாக மாற்றுவது என்பதும், மார்புக்கூடு அதிகமாக இருந்தால், அதை மட்டமாக ஆக்கவும் முடியாது என்பதையும் பரிபூரணமாக உணர வேண்டும். ஆகவே, நாம் செய்யப் போகின்ற உடலழகுப்