பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 டாக்டர் எஸ். நவராஜ செல்லையா பயிற்சிகள் என்னென்ன பலனைத் தரும் என்பதை அறிந்து கொள்ளத் தான் இப்பகுதியை எழுதுகிறோம்.

  • இங்கு மங்குமாக சிதறிக் கிடக்கின்ற இடுப்பைச் சுற்றி யுள்ள வேண்டாத, விரும் பத் தகாதத் தசைகளை, எளிதாக மாற்ற உதவுகிறது.
  • தொடைத் தசைகளையும் , கெண்டைக் கால்

தசைகளையும் சீராக்கி ஒழுங்குபடுத்துகிறது.

  • தசைகளை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து உங்கள் விருப்பம் போல, தசைகளுக்கு ஏற்ப, விரும்பிய அமைப்பைக் கொடுக்கிறது.
  • கைகளில், கால்களில், கணுக்கால்களில் மார்பகத்தில், இடுப் பில் , தேவையான அளவு தசைகளை வளர்த்துக் கொள்ள வழியமைக்கிறது.

Yk கன்னத்திலே தொங்குகின்ற தசை, தோள்களிலே கனத்துக் தடித்துக் கிடக் கின்ற தசைகள், விலா எலும் புகளுக்குக் கீழே விரிந்து வளர்ந்து அடர்ந் திருக்கிற் னற தசைப் பகுதிகளை விரட்டியடிக்கிறது. -

  • ஊளைச் சதையை ஒழிப்பது போலவே, ஒல்லியாக இருந்தாலும் நல்ல அளவு தசைகளை உண்டாக்கிக் கொள்ள உறுதுணையாக இருக்கிறது.
  • எலும்புகள் வலுவுள்ளனவாக இருந்து, ஏற்றதொரு உடலமைப்பைத் தந்திருந்த்ால், உடலழகுப் பயிற்சிகள் ஒயிலான தோற்றத்தை அளிக் கும். கவர்ச்சி தருகின்ற கட்டுடலைக் கொடுக் கும். நளினத்தையும் நல்கும்.