பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 டாக்டர் எஸ். நவராஜ செல்லையா பழகியவருக்குப் பத்துப் பயிற்சிகள்: 1. கால்களை ஒரடி அகலமாக வைக்கவும். - இரு கைகளையும் முன் o புற மாக நீட் டவும். மூச்சை நன்றாக இழுத்துக் கொள்ளவும். இரு கைகளையும் பக்க வாட் டில் தோள் அளவுக்கு விரிக்கவும். சிறிது நேரம் கழித்து முன் இ நிலைக்கு வந்து மூச்சு இ விடவும். (15 முறை) 2. இயல்பாக நின்று, கைகள் இருபுறமும் தொடையருகே இருக்கவும். மூச்சை நன்றாக இழுத்துக் கொள்ளவும். இரு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்தி (உள்ளங்கைகளை) சேர்க்கவும். சிறிது நேரம் கழித்து, முன்நிலைக்கு வந்ததும், மூச்சு விடவும். (15 முறை) 3. ஒரடி அகல இடைவெளியுடன் கால்களை வைத்து, கைகள் இரண்டும் தொடை முன்பகுதியில் இருக்குமாறு நிற்கவும். மூச்சை நன்றாக இழுத்துக் கொள்ளவும். வலது கையை மட்டும் தலைக்கு மேலே உயர்த்தவும். சிறிது நேரம் கழித்து முன்நிலைக்கு வந்ததும், மூச்சு விடவும். (15 முறை) வலது கைபோல் இடது கையாலும் செய்யவும். (15 முறை)