பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 டாக்டர் எஸ். நவராஜ செல்லையா கைகளும் கால்களும் முன் நிலைக்கு வர மூச்சை விடவும் (20 முறை) 12. இயல்பாக நின்று, இடுப்பிலே கை வைத்துக் கொண்டு, ஒரடி அகல இடைவெளிக்குத்துள்ளிக் குதித்து பின் கால்களைச் சேர்க்கவும். கால் விரியும் போது மூச்சிழுத்துக் கூடும்போது மூச்சை விடவும். (1 நிமிடம் வரை செய்யவும்) = இறுதியாகக் கூறிய இரண்டு பயிற் சிளும் கால்களுக்கு நல்ல வலிவையும், நல்ல நெஞ்சுரத்தையும் அளிக்க வல் லனவாகும். முறை யுடன் அதிக எண்ணிக்கையிலும், அதிக முறை செய்து பயன் பெறுக! 6. எடுப்பான மார்பகம் பெற ஏற்ற வழிகள் பெண்களுக்குப் பேரழகு தரக்கூடியதும், பெருமை அளிக்கக் கூடியதும் ஒன்றே ஒன்று. அதுதான் மார்பகம். பெண்ணுக்குத் தன்னழகைக் கூட்டவும், தன்னம்பிக் கையை ஊட்டவும், தத்ரூபமான ஒரு மெருகை ஏற்றித் தரவும் வல்லது என்பதை எல்லோரும் அறிவர். அப்படி இல்லாதவர்கள், அதை மிகுதிப்படுத்திக் கொள்ள முயல்வதையும் பார்க்கிறோம். செயற்கை சாதனங்களை வைத்துக் கொண்டு, சிங் காரித்துக் கொள்வதையும், சிரம் உயர்த்தி நடப்பதையும் நாம் அன்றாட வாழ் வில் பார்த்தும் வியக் கிறோம். அதுதான் இன்றைய நாகரிகம் என்று