பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்களும் பேரழகு பெறலாம் 65 பயிற்சி 1 == நிமிர்ந்து, கால்களை இயல்பாக வைத்து நிற்கவும். கைகளிரண்டையும் மார்புக்கு முன் உயர்த்தியிருக்கவும், மூச்சை நன்றாக உள்ளிழுக்கவும் - தோள்களிலிருந்து மார்பகத்தை மேலாக உயர்த்தி, பின்புறமாகவும், பிறகு கீழாகவும், முன் புறமாகவும் வருவது போல ஏற்றி இறக்கிச் சுழற்றவும். (20 முறை) பயிற்சி 2 வலது காலை ஒரடி முன்னே வைத்து, கைகள் இரண்டும் தொடையின் பக்கவாட்டில், இருப்பது போல் விறைப்பாக நிமிர்ந்து நிற்கவும். மூச்சை நன்றாக உள் இழுக்கவும். பிறகு கையிரண்டையும் தலைக்கு மேலே கொண்டு செல்லவும். சிறிது நேரம் கழித்து, முன் நிலைக் குக் கைகளைக் கொண்டு வந்து, மூச்சு விடவும். (20 முறை) பின், இடது காலை முன்னே வைத்து, இதே போல் செய்யவும். (20 முறை) பயிற்சி 3 இரண்டாம் பயிற்சி போல் நின்று, உள்ளங்கைகள் கீழ் நோக்கி இருக்குமாறு, மார்புக்கு முன் புறமாக கைகளை நீட்டவும். மூச்சை நன்றாக உள்ளிழுக்வும். கால்களை நகர்த்தாமல் கைகளை மட்டும் இடது புறம் பக்க வாட் டிற்கு விறைப்பாக நீட் டவும். முகமும் திரும்ப வேண்டும். முன் நிலைக்குக் கைகள் வந்ததும், மூச்சை விடவும். பிறகு வலப்பக்கமாகச் செய்யவும். (20 முறை) (இடுப்பு மட்டுமே சுழல வேண்டும். கால்கள் அசையவே கூடாது)