பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்களும் பேரழகு பெறலாம் 67 சேர்க்கவும். சிறிது நேரம் கழித்து, முன் நிலைக்கு வந்ததும், மூச்சு விடவும் (15 முறை) பயிற்சி 7 கால்களை அகலமாக வைத்து நிற்கவும். கைகள் இரண்டும் பக்கவாட்டில் விறைப்பாக நீட்டி இருக்க, நன்றாக மூச்சை இழுத்துக் கொள்ளவும். இடுப்பை முறுக்குவது போல (Twist) இடது கை முதுகுப் புறமும், வலது கை மார்புப் புறமும் இருப்பதுபோல் வைத்து சிறிது நேரம் கழித்து முன் நிலைக்குக் கொண்டு வந்து மூச்சைவிடவும். இடதுபுறம் திரும்பும் போது இடது கை விரல்களை, கண் பார்ப்பது போல இடப்புறம் திரும்பவும், வலப் புறத்திற்கும் வலப் புறம் திரும்ப வேண்டும். (20 முறை) பயிற்சி 8 கால்கள் இரண்டையும் சேர்த்து நிற்கவும் , கைகளை இடுப் பில் ஊன்றி இருக்கவும். கால்களை மடக்காமல் விறைப்பாக நிற்கவும். பிறகு நன்றாக மூச்சிழுத்துக் கொள்ளவும். ஒரு காலை மட்டும் பின்னால் கொண்டு செல்லவும். காலைப் பின்புறம் துக்கியிருக்கும் போது மேலுடல் பகுதி முழுவதும் குறிப்பாக, மார்பகப் பகுதிகள் இறுகிய தன்மையில் ஏற்றி வைத்திருக்கவும். முன் நிலைக்கு வந்ததும் , முச்சுவிடவும். (15 முறை) அதே போல் மறு காலாலும் செய்ய வேண்டும். மாறி மாறிச் செய்தல் நல்லது (15 முறை)