பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 டாக்டர் எஸ். நவராஜ செல்லையா T. இடையழகும் பின்னழகும் o மேலழகுக் கும் காலழகுக் கும் இடைப் பட்டது தான் இடையழகு. இந்த இடைப்பட்ட எழிலார்ந்த இடம் தான், உருவத்திற்கு உயர்ந்த ஏற்றத்தையும் , உல்லாசத் தோற்றத்தையும் அளிக்கிறது. இடை அசைவின் விசையில் தான், நடையில் நளினமும் புதினமும் தோன்றுகிறது. இடையைப் பற்றி வருணிக்காத புலவர்களும் இல்லை. இடையைக் கண்டு மயங்காத மானிட வர்க்கமும் இல்லை. அதனால்தான் என்னவோ, கம்பர் கூட 'பொய்யோ எனும் இடையாள் என்று சீதையை வருணிக்கிறார். அந்த அளவுக்குச் சிற்றிடையாக சிங்கார இடையாக சீதையை வருணிக்கும் போது, அந்த உடல் அமைப்பு எப்படி இருந்திருக்கும் என்பதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்! அந்த அழகும் , பெண் தனது இடுப் பை மெல் லியதாகவும் தசைகள் வந்து சூழ்ந்து கவ் விக் கொண்டு, இடுப்பைப் பெரியதாக மாற்றிவிடாமல் பார்த்துக் கொள்கின்ற காலம் வரைக் கும் தான் கண்ணுக்கு அழகாகவும், கவர்ச்சியாகவும் காட்சி அளிக்க முடியும். சின்ன இடை இருக்கும் போதுதான் நடையிலே நளினமும் பொலிவும் இருக்கும். எனவே, இந்த இடுப்பின் அமைப்பு தாய்மையின் சேவைக் காகவும் , ஆண்களின் அறிவை சுண்டியிழுக்கின்ற அற் புத அங்க அசைவு தரும்